மன்னிப்பு கேட்க பாட்டாளிக் கட்சி எம்பி மறுப்பு

சிங்கப்பூரில் ஜிஎஸ்டி எனப்படும் பொருள், சேவை வரி உயர்வை நடப்புக்குக் கொண்டு வரும் காலம் தொடர்பில் அரசாங்கம் பின்வாங்கியிருக்கிறது என்ற தமது சந்தேகம் தவறானதாக இருக்கக்கூடும் என்று பாட்டாளிக் கட்சித் தலைவி சில்வியா லிம் தெரிவித்து இருக்கிறார். அப்படி அவர் கூறியதை மீட் டுக்கொண்டு அதற்காக திரு வாட்டி லிம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மக்கள் செயல் கட்சி அமைச்சர்கள் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுத்தும் திருவாட்டி லிம் அந்தக் கோரிக் கையை ஏற்று மன்னிப்புக் கேட்க வில்லை. மக்களின் கவலைகளையும் கருத்துகளையும் குழப்பங்களை யும் தெரியப்படுத்தி அதன்மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தான் தன் கடமையைச் செய்திருப்பதாக திருவாட்டி லிம் கூறினார்.

அரசாங்கம் உண்மையானதாக அல்ல என்றோ நேர்மையற்ற முறையில் அது நடந்துகொள் கிறது என்றோ தான் கூறவில்லை என்றார் திருவாட்டி லிம். இதற்குப் பதிலளித்த நாடாளு மன்றத் தலைவி கிரேஸ் ஃபூ, திருவாட்டி லிம்மின் முடிவு தமக்கு ஏமாற்றம் தருவதாகக் கூறினார். "திருவாட்டி லிம் கூறுவதை வைத்துப்பார்த்தால் அரசாங்கம் வெளியே ஒன்றைக் கூறிவிட்டு உள்ளே மற்றொன்றை ரகசியமாக செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!