புதுடெல்லி: உலகளவில் கட்டடக் கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'பிரிட்ஸ்கர்' விருது இந்தியாவின் பாலகிருஷ்ண தோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. 90 வயதான இவர் கடந்த 45 ஆண்டுகளாக வழங்கப்படும் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெறுகிறார். டெல்லியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிலை யம், பெங்களூரூ மற்றும் லக்னோ வில் உள்ள தேசிய நிர்வாக கல்வி நிலையம், தாகூர் அரங்கம் உட்பட பல கட்டடங்கள் இவர் கட்டியவற்றில் முக்கியமானவை.
மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் குறைந்த விலையில் ஆரண்யா ஹவுஸ்சிங் என்ற முன் னோடியான வீட்டு வசதித் திட் டத்தைக் கடந்த 1989ஆம் ஆண் டில் வெற்றிகரமாக நிறைவேற்றி னார். காலத்தால் அழியாத கட்டடங் களை வடிவமைப்பதில் பால கிருஷ்ணா தோஷி தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதை இந்த விரு துக்கான நடுவர் குழு பாராட்டி உள்ளது. வரும் மே மாதம் கனடா வின் டொராண்டோவில் நடைபெற உள்ள விழாவில் இந்த விருதை அவர் பெற்றுக்கொள்கிறார்.
45 ஆண்டுகளாக வழங்கப்படும் 'பிரிட்ஸ்கர்' விருதைப் பெறும் முதல் இந்தியர் பாலகிருஷ்ணா தோஷி. படம்: ஏஎஃப்பி