ஜான்வி: திரும்பி வந்துவிடுங்கள் அம்மா

ஸ்ரீதேவியின் திடீர் மறைவால் சோகத்தில் இருக்கும் அவரது மூத்த மகள் ஜான்வி தனது பிறந்தநாளை மிக எளிமையான முறையில் முதியோர் இல்லம் ஒன்றில் கொண்டாடி உள்ளார். ஜான்விக்கு 21 வயதாகிறது. வழக்கமாக குடும்பத்தாருடன் பிறந்தநாளை குதூகலமாகக் கொண்டாடி வந்தவர், இந்த ஆண்டு பெற்ற தாயின் மறைவால் எந்தவித கொண்டாட்டமும் வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். இருப்பினும் நெருக்கமானவர்கள் வற்புறுத்தியதை அடுத்து முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அந்த இல்லத்தில் இருப்பவர்கள் வாழ்த்தியதால், தன் மனம் சற்றே ஆறுதல் அடைந்திருப்பதாகக் கூறுகிறார் ஜான்வி. இந்நிலையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "நான் மகிழ்ச்சியாக இல்லை. திரும்பி வந்துவிடுங்கள் அம்மா," என்று ஜான்வி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!