கோலோச்சும் நாயகிகள்

"கடந்த 2014ஆம் ஆண்டுவரை கூட நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் கடந்த 1970, 80களில் பாலச்சந்தர் போன்றோர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். "பெண் கதாபாத்திரங்களைத் திரையில் ஆராதித்தனர். தமிழ் ரசிகர்கள் அவற்றை நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படமாகப் பார்க்கவில்லை. மாறாக கதையம்சம் உள்ள படைப்புகளாகவே கருதினர். "ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. நடிகைகள் கதை நாயகிகளாக சித்திரிக்கப்பட்டபோது, ரசிகர் கள் கண்டுகொள்ளவில்லை. தற்போது நயன் தாரா, ஜோதிகா போன்றோர் தங்கள் நடிப்பால் ரசிகர்களைப் பரவசப்படுத்துகின்றனர். அத னால் பெண்ணியம் பேசும் படைப்புகளும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங் களும் எண்ணிக்கை அளவில் அதிகரித் துள்ளன," என்கிறார் தனஞ்செயன்.

'36 வயதினிலே' படம் உருவானபோது நடிகைகளை முன்னிலைப்படுத்தக் கூடிய படங்கள் எதுவுமே இல்லை. ஆனால் இப்போது அப்படிப்பட்ட படங்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது என்கிறார் ஜோதிகா. "இப்போது எல்லா கதாநாயகிகளுக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. நடிகையை சார்ந்துள்ள படங்களில் நடிக்கும் வாய்ப்பு இனி எல்லா நாயகிகளுக்கும் கைகூடி வரும். இதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

இத்தகைய போக்கு தமிழ்ச் சினிமாவின் தரத்தை உயர்த்தும்," என்று ஜோதிகா கூறு வதை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள முடிகிறது. தற்போது நயன்தாரா நடிக்கும் 'கோலமாவு கோகிலா', திரிஷா நடிக்கும் 'நாயகி', கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'நடிகையர் திலகம்', ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதுப்படம் உட்பட மேலும் பல படைப்புகள் நாயகிகளை முன்னிலைப்படுத்தி உருவாகி வருகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!