மீண்டெழுந்த ஆர்சனல்; மகிழ்ச்சியில் வெங்கர்

மிலான்: மிலான் காற்பந்துக் குழுவை ஆர்சனல் குழு வீழ்த்தி­யது குத்துச்சண்டை போட்டியில் மீண் டெழுந்ததைப் போன்று இருந்தது என்று கூறியுள்ளார் அதன் நிர் வாகி வெங்கர். நேற்று அதிகாலை யூரோப்பா லீக் காற்பந்துத் தொடரின் 16 குழுக்கள் கொண்ட சுற்றின் முதல் ஆட்டத்தில் மிலான் குழுவை 2=0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஆர்சனல். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளில் தொடர் தோல்வி என்ற மோசமான நிலையை ஆர் சனல் தவிர்த்தது. ஏற்கெனவே கடந்த 1977ஆம் ஆண்டில் ஆர் சனலுக்கு இந்த மோசமான நிலை ஏற்பட்டு இருந்தது.

கடைசி நான்கு ஆட்டங்களி லும் தோல்வியைத் தழுவிய ஆர் சனல் நிர்வாகி வெங்கருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று மிலான் குழுவிற்கு எதிராக விளையாடிய போது ஆர்சனலுக்கான முதல் கோலை 15வது நிமிடத்திலேயே போட்டு குழுவிற்கு நம்பிக்கை அளித்தார் மிக்கிதார்யான். முதல் பாதி நேரத்தில் ஆதிக் கம் செலுத்திய அவர்கள் தாக்கு தல் ஆட்டத்தில் சிறப்பாக செயல் பட்டனர்.

யூரோப்பா லீக் காற்பந்துத் தொடரில் மிலான் வீரரிடம் இருந்து பந்தைத் தட்டிப் பறிக்கும் ஆர்சனல் வீரர் டேனி வெல்பேக். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!