‘பந்து வீச்சாளர்களால் கிடைத்த வெற்றி’

கொழும்பு: முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்ளாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது பந்து வீச்சாளர் களால் கிடைத்த வெற்றி என இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா பாராட்டி உள்ளார். இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ் ஆகிய 3 நாடுகள் விளையாடும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் நடந்த 2வது லீக் ஆட்டத் தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முதலில் பந்தடித்த பங்ளா தேஷை இந்திய அணி 139 ஓட்டங் களுக்குச் சுருட்டியது. அதன் பிறகு விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் தவானும் இறங்கினர். ரோகித் சர்மா, ரிஷப் பந்த் ஆட்டமிழந்த பிறகு, சுரேஷ் ரெய்னா இறங்கினார்.

தவானும் ரெய்னாவும் நிதான மாக ஆடினர். தவான் அரைசதம் அடித்து அசத்தினார். 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டும் விஜய் சங்கர் 2 விக்கெட்டும் ஷர்துல் தாகுர், சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியா பெற்ற முதல் வெற்றி குறித்து இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா, "இது சிறப்பான செயல்பாடு ஆகும். இதைத்தான் வீரர்களிடம் இருந்து எதிர் பார்த்தோம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!