நகர மன்றச் சட்டங்களை மீறிய குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக் கையை எடுப்பதற்கு முன் அவர் களுடன் கலந்துரையாடல் நடத்து வது உட்பட இரு புதிய நெறி முறைகளை அரசு நீதிமன்றம் நகர மன்றங்களுக்கு அறிமுகப்படுத்தி யுள்ளது. இது குறித்து நேற்று நடைபெற்ற அரசு நீதிமன்றத்தின் பணித்திட்டக் கருத்தங்கில் பேசிய நீதிபதி திரு சீ கீ ஊன், இந்த இரண்டு புதிய நெறிமுறைகளும் அடுத்த மாதம் நடப்புக்கு வரும் என்று தெரிவித்தார்.
குறைந்த அளவிலான குற்றங் கள் புரிவோர் பொதுவாக அபரா தத்துடன் தண்டிக்கப்படுவர். அரசு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றங்களில் 95 விழுக்காட்டுக்கு மேல் இத்தகைய குற்றங்களே. அதில் கிட்டத்தட்ட 86 விழுக் காட்டு குற்றங்கள் அபராதம் அல் லது தீர்வு காணுதல் மூலம் முடி வுக்குக் கொண்டு வரப்படலாம். பெரும்பாலான நகர மன்றக் குற்றங்கள், சேவை மற்றும் பய னீட்டுக் கட்டணங்களைச் செலுத் தாததற்கானவை என்று நீதிபதி சீ சொன்னார்.