சிறுவனைக் காயப்படுத்திய மின் ஸ்கூட்டரோட்டிக்கு $2,500 அபராதம்

கவனக்குறைவாக தங்கள் மின் ஸ்கூட் டர்களை ஓட்டியதால் பாதசாரிகளுக்குக் காயம் விளைவித்த மூவர் மீது நேற்று அரசு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. சிங்கப்பூரர்களான 22 வயது ஐவின் டோ (படத்தில், இடது), 26 வயது லியு ஜியாமிங் (நடு), சீன நாட்டவரான 32 வயது சென் ஜியான் (வலது) ஆகி யோரே அவர்கள். அவர்களில், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 2, புளோக் 607 தரைத்தளத்தில் உள்ள மின்தூக்கிக்கு அருகில் மின் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டி, 11 வயது சிறுவன் மீது மோதி காயப்படுத்திய சென்னுக்கு $2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி, யீ‌ஷூன் பார்க் உணவங்காடி நிலையத்தில் இருந்த 61 வயது திருவாட்டி டே போ சூன் மீது லியு தனது மின் ஸ்கூட்டரை மோதி னார். அதனால் திருவாட்டி டேக்கு தலையில் காயம் ஏற்பட் டது. கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி உட்லண்ட்ஸ் டிரைவ், புளோக் 549க்கு அருகில் வேகமாக மின் ஸ்கூட் டரை ஓட்டியதால், எட்டு வயது சிறுவன் மீது டோ மோதி னார். அதனால் சிறுவனின் முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன. கவனக்குறைவான செயலால் மற்றவர்களுக்குக் காயம் விளைவிப்போருக்கு ஆறு மாதம் வரையிலான சிறையும் $2,500 வரையிலான அபராதமும் தண்டனைகளாக விதிக்கப்படலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!