ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுவதற்கு முன் முஸ்லிம்கள் ஓடும் நீரில் குறிப்பிட்ட தங்கள் உடல் பகுதிகளைக் கழுவுவார்கள். அத்தகைய குழாயிலிருந்து ஒரு நிமிடத்துக்கு சுமார் ஆறு லிட்டர் தண்ணீர் வெளியாகிறது. இந்த உடல் பகுதிகளைக் கழுவும் சடங்கு ஒவ்வொருவருக்கும் வேறு பட்டிருக்கும். தண்ணீரைச் சேமிக்கும் முயற் சியாக செங்காங்கில் உள்ள அல் -மவத்தா பள்ளிவாசலின் சமய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் 0.75 லிட்டர் தண்ணீர் கொண்ட போத்தலைப் பயன்படுத்தி, உடற் பகுதிகளைக் கழுவும் சடங்கை மேற்கொள்வது எப்படி என்று நேற்று செய்து காட்டினார்கள்.
அந்தப் பள்ளிவாசலில் வெள் ளிக்கிழமை தொழுகையில் நேற்று பங்கேற்ற சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, அங்கு மேற்கொள்ளப்படும் தண் ணீர் சேமிப்பு நடைமுறைகளையும் பார்வையிட்டார். ஓடும் நீரில் உடல் பகுதிகளைக் கழுவும் 'ஒது' எனும் சடங்குக்கு 0.75 லிட்டர் நீரைப் பயன்படுத்து தலைப் பார்வையிட்டதுடன் அந்தப் பள்ளிவாசலில் உள்ள மழைநீரை சேகரிக்கும் முறை, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியாகும் நீரைக் கொண்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் முறையையும் தரையைக் கழுவும் முறையையும் கண்ணுற்றார்.
அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (வலது) முன்னிலையில் 13 வயது முகம்மது அஃபிஃப் (இடது), 0.75 லிட்டர் தண்ணீரைக் கொண்டு 'ஒது' எனும் உடற்பாகங்களைக் கழுவும் சடங்கை மேற்கொள்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்