தூத்துக்குடி: தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை பாஜக பிரமுகரான ஒரு பெண்மணி கன்னத்தில் அறைந்துவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் திருச்செந்தூர் கோயிலில் பாஜக பெண் நிர்வாகியைத் தாக்கியது அய்யாக்கண்ணுதான் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம், நஞ்சில்லா விவசாயம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் தவிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி கன்னி யாகுமரியில் இருந்து சென்னை நோக்கி மார்ச் முதல் தேதியில் இருந்து அய்யாக்கண்ணு நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் திருச்செந்தூர் சென்றார். அய்யாக்கண்ணு, வியா ழக்கிழமை பிற்பகல் நேரத்தில் திருச்செந்துர் கோயில் வாசலில் நின்று பக்தர்களிடம் துண்டுப் பிர சுரங்களை வழங்கினார்.
அப்போது அங்கு வந்த பாஜக மாவட்ட நிர்வாகி நெல்லையம்மாள், கோயில் முன்பு பிரசாரத்தில் ஈடு படக்கூடாது எனக் கூறி, அய்யாக் கண்ணுவுடன் வாக்குவாதம் செய் தார். அய்யாக்கண்ணுவைத் தில்லு முல்லு பேர்வழி என்று அந்தப் பெண்மணி கண்டித்தார். அப்போது நெல்லையம்மாள், திடீ ரென அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அறைந்தார். அருகிலிருந்த வர்கள் மாதை அப்புறப்படுத்தினர் என்று அய்யாக்கண்ணு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி கருத்து கூறிய அய்யாக்கண்ணு, "கோயில் முன்பு துண்டுப் பிரசுரம் கொடுக்கக் கூடாது எனக் கூறி, பாஜகவை சேர்ந்த பெண் தாக்க முயன்றார். அவரை அருகில் இருந்தவர்கள் தடுத்துவிட்டனர். இது குறித்து புகார் எதுவும் கொடுக்கவில்லை," என்று தெரிவித்தார்.