திருப்பேரூர்: மாணவர்கள் அரசியலைக் கண்காணித்து, அர சியல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித் துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், திருப் பேரூர் அடுத்த காலவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெறி யியல் கல்லூரியில் கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் தெடக்கவிழா, கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடந்தது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகெண்டார். கலாசார நிகழ்ச்சியை அவர் குத்துவிளக்கேற்றி தெடங்கி வைத்தார். நிகழ்சியில் பேசிய அவர், "நமது பாதையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்," என்றார். "என் பாதையை நான் தீர் மானிக்க உதவிய எனது பெற்றே ருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். "அதே பரிமாணங்களை நீங்கள் பெறும் காலகட்டம்தான் கல்லூரிக் காலம்.
"இதுதான், நீங்கள் பல்வேறு பரிமாண வளர்ச்சிகளான அறி வியல், விளையாட்டு, தெழில்நுட் பம் பேன்றவற்றைப் பெறக்கூடிய இடம். அதனால், இந்த நாட்களை அனுபவித்து உரிய பாதைகளைத் தேர்ந்தெடுங்கள். சேதனைக் காலமும் இதுதான். அப்துல் கலா மும் இதைத்தான் கூறினார்," என்று மாணவர்களிடம் கமல் பேசினார். "மாணவர்கள் கல்வி கற்கும் காலத்தில் அரசியலுக்கு வர வேண்டாம். ஆனால், அரசியலைக் கண்காணித்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். "இதன்மூலம், பல்வேறு மாற்றங் கள் ஏற்பட்டுக்கெண்டே வரும். மக்களாட்சி மலர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் அதை முடிவுசெய்யவேண்டும். "மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மய்யம் என்பதைக் கிண்ட லடிக்கிறார்கள். மய்யமாக இருந்து செயல்படுவது மிகவும் கடினம்," என்று கமல் பேசினார்.