தினகரனுக்கு குக்கர் சின்னம்; ஆணையத்துக்கு உத்தரவு

புதுடெல்லி: ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு புதுடெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட ஏதுவாக, தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விடக் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வி.கே. சகிகலாவை உள்ளடக் கிய டி.டி.வி. தினகரன் அணி சார்பில் அண்மையில் தாக்கலான அம்மனுவில், "இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. ஆகவே, தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் தரப்பு, புதிய பெயரில் இயங்கும் வகையில் கட்சியின் பெயரை ஒதுக்குவதற்கும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் அனுமதி அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்," என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!