You are here

சிறுமிக்கு மோசமான காயம், போலிசார் விசாரணை

பாலர் பள்ளியிலிருந்து வீடு திரும்­பிய மூன்று வயதுச் சிறுமியின் வலது காதில் மோசமான காயம் காணப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்­துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சி­ டம் தெரிவித்த பாலர்பருவ மேம் பாட்டு முகவை சிறுமியின் தாய் திருமதி கிளௌடியா குவானுடன் தொடர்புகொண்டிருப்பதாகக் கூறியது. அங் மோ கியோவில் உள்ள பாலர் பள்ளிக்கு சிறுமி சென்றதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திருமதி கிளௌடியா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சனிக்கிழமை அன்று எழுதியிருந்தார்.

பிப்ரவரி 14ஆம் தேதி தமது கணவர், மகளை பாலர் பள்ளியி லிருந்து அழைத்து வந்தபோது ஏதோ சரியாக இல்லை என உணர்ந்தார். தமது காரை நிறுத்திய பின் சிறுமியைச் சோதித்த அவர், சிறுமியின் வலது காதில் மோசமான காயம் ஏற்பட்டிருப்பதை அறிந்தார். கடுமையான காயத்தினால் அப்பகுதி மோசமாக வீங்கி இருந்தது என்றும் பின்னர் அது குறித்து கேட்டதும் தமது மகள் அழத் தொடங்கி விட்டாள் என்றும் திருமதி கிளௌடியா குறிப்பிட்டுள்ளார்.

காயத்தினால் கறுத்து, வீங்கியிருக்கும் சிறுமியின் காது. படம்: திருமதி கிளௌடியாவின் ஃபேஸ்புக்