You are here

சமூகத்துடன் இணைந்திருக்க ‘வாட்ஸ்அப்’ சேவை

ப. பாலசுப்பிரமணியம்

இந்து அறக்கட்டளை வாரியத் தின் கீழ் இயங்கும் கோயில்களில் எப்போது ஒரு முக்கிய நிகழ்வு நடக்கிறது என்பதை அறிய இனி நேரடியாக கோயில்களைத் தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. மக்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘வாட்ஸ்அப்’ (Whatsapp) கைபேசி செயலி வழி பக்தர்களுடன் இணைகிறது இந்து அறக்கட்டளை வாரியம். கடந்த மாதம் அது அறிமுகம் செய்த ‘வாட்ஸ்அப்’ தகவல் சேவை வழி ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஆகிய நான்கு கோயில்களில் நடக்கவுள்ள முக்கிய விழாக்கள் குறித்த விவரங்களை இச்சேவை வழி தெரிந்துகொள்ள முடியும். நடந்து முடிந்த விழாக்களின் தகவல்களும் இந்த ‘வாட்ஸ்அப்’ சேவைக்குப் பதிவுசெய்வோரிடம் சென்று சேரும். “வாட்ஸ்அப் சேவை வழி தகவல்களைப் பகிர்ந்துகொள்வது முதியோர் உட்பட பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையில்

இந்து அறக்கட்டளை வாரியம் கடந்த மாதம் முதல் தொடங்கியுள்ள ‘வாட்ஸ் அப்’ சேவை. படம்: த கவி