You are here

துப்பாக்கி சுடுதல்: தங்கம் குவிக்கும் இந்தியா

மெக்சிகோ: உலகக் கிண்ணத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருவதையடுத்து, இது துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் புதிய சகாப்தத்திற்கான தொடக் கம் என்று கூறியுள்ளார் அபினவ் பிந்த்ரா. உலகக் கிண்ணப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியிருந்தார். 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா, “இந்த இளம் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று இந்தியாவை மேன்மை அடையச் செய்வார்கள்,” என்று கூறியிருந்தார்.

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொட ரில், நேற்று முன்தினம் இந்தியா வின் அகில் ‌ஷியோரன் வென்ற தங்கப் பதக்கம் சேர்த்து அதன் எண்ணிக்கை நான்கானது. ஆண்களுக்கான 50 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ பிரிவுப் போட்டியில் அவர் இந்தப் பதக்கத்தை வென் றார். ஆஸ்திரிய வீரர் பெர்ன்ஹார்ட் பிக் வெள்ளி பதக்கமும் ஹங் கேரியைச் சேர்ந்த இண்ட்வான் பெனி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். கடந்த 10 நாட்களாக நடை பெற்று வரும் இத்தொடரில் தங் கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்ற இந்தியா பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

உலகக் கிண்ணத் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு நான்காவது தங்கம் வென்று தந்த அகில் ‌ஷியோரன். படம்: ஊடகம்