வெற்றிப்பாதையில் மேன்சிட்டி

ஸ்டோக் சிட்டி: நேற்று அதிகாலை நடைபெற்ற காற்பந்துப் போட்டியில் ஸ்டாக் சிட்டி குழுவை 2=0 என்ற கோல் எண்ணிக்கையில் வென்ற பின் இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை மான்செஸ்டர் சிட்டி நெருங்கிவிட்ட தாக அந்த அணியின் தலைவர் வின்சென்ட் கொம்பனி கூறி யுள்ளார்.

ஸ்டோக் சிட்டியுடனான வெற்றியைத் தொடர்ந்து பிரிமியர் லீக் தரவரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட்டைவிட 16 புள்ளிகள் கூடுதலாகப் பெற்ற முன்னணி நிலையை அது தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஸ்டோக் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்களையும் டாவிட் சில்வா போட, "இப்பொழுது எங்கள் அணி இன்னும் இரண்டு மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால் கிண்ணத்தை வெல்வது சாத்தியமாகும். ஆனால், எப்பொ ழுது பட்டத்தை வெல்கிறோம் என்பது முக்கியமல்ல," என்று மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா கருத்துரைத்தார். நேற்றைய ஆட்டத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் கொடுத்த பந்தை ஆட்டத்தின் 10ஆம் நிமிடத்தில் கோல் வலைக்குள் புகுத்திய சில்வா, இரண்டாம் பாதி ஆட்டத் தின் 50ஆம் நிமிடத்தில் இரண் டாவது கோலை போட்டு ஸ்டோக் சிட்டி அணியைத் தோற்கடித்தார்.

பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஸ்டோக் சிட்டியுடன் மான்செஸ்டர் சிட்டி அணி பொருதியது. பிரிட்டனின் பெட்365 விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்த அந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது) கோல் போட தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!