அடுத்த சுற்றில் ஆர்சனல்

லண்டன்: யூரோப்பா லீக் காற் பந்தின் காலிறுதிச் சுற்றுக்கு ஆர்சனல் குழு முன்னேறியது. காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் இத்தாலியின் ஏசி மிலானை அதன் சொந்த மண்ணில் வைத்தே 2=0 என ஆர்சனல் தோற்கடித்திருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை நடந்த 2வது ஆட்டத்திலும் அக் குழுவே ஆதிக்கம் செலுத்தியது. ஹக்கன் ஹல்கனோக்லு 35வது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் மிலான் குழு முன்னிலை பெற்றபோதும் அது நீண்டநேரம் நீடிக்கவில்லை.

அடுத்த நான்காவது நிமிடத் தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் பதில் கோலடித்து ஆட்டத் தைச் சமன்படுத்தினார் வெல்பெக். மிலான் ஆட்டக்காரர் தொடாத போதும் வெல்பெக் வேண்டும் என்றே திடலில் பாய்ந்து நடுவரை ஏமாற்றி பெனால்டி வாய்ப்பு பெற்ற தாகப் பின்னர் விமர்சிக்கப்பட்டது. கிரானிட் ஸாக்கா 71வது நிமி டத்திலும் வெல்பெக் 86வது நிமி டத்திலும் கோல் அடிக்க, ஆர்சனல் 3=1 என வெற்றியைச் சுவைத்தது. இதையடுத்து, ஒட்டுமொத்த கோல் கணக்கில் 5=1 என அபார முன்னிலை பெற்று, ஆர்சனல் காலிறுதிக்குள் நுழைந்தது. 2003-=04 பருவத்திற்குப் பிறகு ஐரோப்பிய காற்பந்துத் தொடரில் 'நாக் அவுட்' சுற்றின் இரு ஆட்டங் களிலும் ஆர்சனல் குழு வென்று இருப்பது இதுவே முதல்முறை.

ஏசி மிலானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனலுக்காக டேனி வெல்பெக் இரு கோல்களை அடித்தபோதும் ஆறு கோல் வாய்ப்புகளை உருவாக்கிய மெசுட் ஓஸில்தான் (வலது) ஆட்ட நாயகனாக மிளிர்ந்தார். இதன்மூலம் 2013 நவம்பருக்குப் பிறகு ஐரோப்பிய காற்பந்துப் போட்டிகளில் அதிக கோல் வாய்ப்புகளை உருவாக்கிய ஆர்சனல் ஆட்டக்காரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!