எம்.நடராஜன் காலமானார்; சசிகலாவுக்கு 15 நாள் ‘பரோல்’

வி.கே.சசிகலாவின் கணவர் ம.நடராஜன் நேற்று காலமானார். அவருக்கு வயது 74. நெஞ்சில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் மூச்சுத் திணறலால் அவதியுற்றதாக அறியப்படுகிறது. நேற்று காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டில் அவரின் நல்லுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்திலுள்ள விளார் கிராமத்துக்கு நல்லுடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்கு நடைபெறும்.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு குற்றத்துக்காக பெங்க ளூரு சிறையில் தண்டனை அனு பவித்து வரும் சசிகலா 15 நாள் 'பரோலில்' கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நேற்று சிறை யிலிருந்து புறப்பட்டுச் சென்றார். சசிகலா தஞ்சாவூரில் மட்டுமே தங்க வேண்டும், சென்னைக்குச் செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளதாக அறியப்படுகிறது. திரு நடராஜன் மாணவப் பருவத்திலேயே 1967இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.

1973இல் நடராஜன் - சசிகலா திருமணத்தைத் திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார். ஆட்சியர் சந்திரலேகா மூலம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அவருக்குப் பழக்கம் ஏற்பட, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியானார் சசிகலா. ஜெயலலிதா முதல்வராக இருந் தபோது திரைமறைவிலிருந்து அரசியல் வியூகங்களை வகுத்து காய்களை நகர்த்திய நடராஜன் ஜெயலலிதா முதல்வராவதற்கு ஒருவகையில் முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

எம்.நடராஜன் படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!