சிரியா அணுஉலை மீதான தாக்குதல்; இஸ்ரேல் ஒப்புதல்

டமாஸ்கஸ்: சிரியாவின் சந்தே கத்திற்கிடமான அணுஉலையை 2007ல் தாக்கி அழித்தோம் என்று இஸ்ரேலிய ராணுவம் நேற்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டது. கிழக்கு டெயிர்-அல்-சூர் வட்டாரம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலால் இஸ் ரேலுக்கும் இந்த வட்டார முழு மைக்கும் இருந்த மிரட்டல் அகன்றது என்றும் அணு உலை கட்டி முடிக்கப்பட்ட தறுவாயில் இருந்தது என்றும் அது குறிப் பிட்டது. சிரியாவின் அணுஉலை தாக்கப்பட்டதில் இஸ்ரேலுக்கு பொறுப்பு இருக்கும் என்று நீண்டகாலமாக உலக நாடுகள் நம்பின. ஆனால் இப்போதுதான் இஸ்ரேல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால் அங்கிருந்தது அணுஉலை அல்ல என்று பலமுறை சிரியா கூறியிருந்தது. சிரியா மீதான அணுஉலை தாக்குலை விவாதிக்க விதிக்கப் பட்ட தடை அகற்றப்பட்டதால் இஸ்ரேலிய ராணுவத்தின் ஒப்புதல் வெளியாகியுள்ளது. முன்னதாக அனைத்துலக அணுசக்தி அமைப்பு, அந்த இடத்தில் அணுஉலை இருப்பதற் கான சாத்தியம் அதிகம் உள் ளது என்று கூறியிருந்தது. மேலும் வடகொரியாவின் உதவியுடன் அந்த அணுஉலை கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அது கருத்து தெரிவித்திருந் தது.

சிரியா அணுஉலை தாக்கப்பட்டதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட படங்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!