மாளவிகா: எனக்கு யாரும் போட்டியில்லை

விழா' படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகமானவர் மாளவிகா மேனன். கேரள இறக்குமதி என்பது பெயரைக் கேட்ட உடனேயே புரிபடும். "நான் மிகவும் வயது குறைந்தவள் என்பதால் வேறு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இப்படித்தான் என்னுடைய சினிமா பிரவேசம் நடைபெற்றது. மலையாளத்தில் சில படங்கள் நடிக்க ஆரம்பித்ததும் தமிழில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தமிழில் 'விழா' முதல் படம்." குடும்பம் குறித்து? "பிறந்தது வளர்ந்தது எல்லாமே கேரளாவில் உள்ள திரிச்சூர் அருகில் இருக்கும் ஒரு கிராமம். அப்பா, அம்மா, நான், தம்பி என்று அழகான சின்ன குடும்பம். நான் சினிமாவில் நடிப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை," என்கிறார்.

தற்போது பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருப்பவர், மேற்கொண்டும் படிக்க திட்டமிட்டுள்ளாராம். வீட்டில் இருந்தால் தன்னை பாடப் புத்தகத்தோடுதான் பார்க்க முடியும் என்கிறார். முத்தக் காட்சியில் நடிப்பீர்களா? "உதட்டோடு உதடு பொருத்தும் அளவுக்குப் போகமாட்டேன். கதைக்குத் தேவையில்லாத பட்சத்தில் முத்தக்காட்சி வந்தால் அது கதைக்கே பின்னடைவாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஒருவேளை காதல் கதை அல்லது கதைப்படி முக்கியத்துவம் இருந் தால் முத்தக்காட்சியில் நடிப்பதைப் பற்றி யோசிப்பேன்." நடிப்பை யாரிடம் கற்றுக்கொண்டீர்கள்?

"யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. அதுவாக வந்தது. படங்களில் நடிக்க நடிக்க என்னை நானே மெருகேற்றிக் கொள்கிறேன்." கனவு வேடம்? "முன்பு கேட்டிருந்தால் முழித்திருப்பேன். ஆனால் 'பாகுபலி'க்குப் பிறகு எனக்கு மட்டுமல்ல, எல்லா நடிகைகளுக்குமே அனுஷ்கா நடித்த கதாபாத்திரத்தைத்தான் விரும்புவார்கள்." சினிமாவில் யாரைப் போட்டியாகப் பார்க்கிறீர்கள்? "இது போட்டிகள் நிறைந்த உலகம்தான். ஆனால் எனக்கு யாரும் போட்டி இல்லை. இதுவரை யாரையும் அப்படிப் பார்க்கவில்லை," என்கிறார் மாளவிகா மேனன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!