காணொளிப் பிரியர்களுக்கு இலவச ‘எடிட்டிங்’ செயலிகள்

இப்போதெல்லாம் புகைப்படங்கள் எடுப்பதற்கும் காணொளிகள் எடுப்பதற்கும் கைபேசிகள் முக் கியமாகப் பயன்படுகின்றன. அதிலும், இப்போது வரும் கைபேசிகளால் மிகவும் தெளி வான காணொளிகள் எடுக்க முடிகிறது.

பொதுவாக, வலைப்பதிவாளர் கள் ‘யூடியூப்’, ‘ஃபேஸ்புக்’ போன்றவற்றில் பதிவேற்றும் காணொளிகளில் பல கைபேசி களில் எடுக்கப்பட்டவை. அந்தக் காணொளிகள் நல்ல தரத்தில் நவீன காணொளிக் கருவிகளில் எடுத்ததுபோல காட்சியளிக்க ‘எடிட்டிங்’ அவசியம். ‘Vlogit’ செயலி மூலம் மிகவும் எளிதாக காணொளி களை ‘எடிட்’ செய்து பின்னணி குரல் கொடுத்து இணையத் தளங்கள், வலைப்பதிவுகள் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யலாம்.

மிக விரைவாக இசையுடன் கூடிய காணொளிக் காட்சிகளை ‘எடிட்’ செய்ய ‘Quik’ எனும் செயலி பயன்படுகிறது. குறிப் பாக, ‘இன்ஸ்டாகிராம்’ பக்கங் களுக்காகப் பிரத்தியேகமாக கைபேசித் திரையிலேயே காணொளிகளை இந்த செயலி யில் ‘எடிட்’ செய்யலாம். காணொளிகளை நொடிப் பொழுதில் இந்தச் செயலிகள் மூலம் எடிட் செய்துகொள்ள இயலும். இந்தச் செயலிகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்