‘ஈட்டிகோ’- கழிவு விலையில் அறுசுவை உணவு

உள்ளூரில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி மூலம் சிங்கப்பூரில் உள்ள பிரபலமான உணவகங் களில் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் கழிவு விலையில் முன்பதிவு செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்தில் 10% முதல் 50% விழுக்காடு வரை உணவு விலையில் கழிவு கிடைக்கும். இந்த செயலியில் இந்திய உணவகங்கள் உட்பட சுமார் 3,000க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட உணவகங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம். அதோடு, உணவகத்தைப் பற்றியும் உணவின் தரத்தைப் பற்றியும் செயலியில் மதிப்பீடு செய்யலாம். பலவகையான உணவு, உணவகத் தெரிவுகளை இந்தச் செயலி வழங்குகிறது. https://eatigo.com/home/ sg/en/singapore/ என்ற இணைய முகவரியில் உணவக முன்பதிவுகளை மேற்கொள்ள லாம். பணம் செலுத்தவோ, கடன் பற்று அட்டை விவரங்களை அளிக்கவோ தேவையில்லை. பற் றுச்சீட்டுகள் ஏதும் வழங்கப்படுவ தில்லை. முன்பதிவு மட்டுமே.