பொய்ச் செய்திகளைக் கையாளும் பயிற்சி

அடுத்தடுத்து நடந்த மூன்று பயங் கரவாத பாவனைத் தாக்குதல் களைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் கிலும் வாட்ஸ்அப்-பிலும் வேக மாகப் பரவிய பொய்ச் செய்திகள், தவறான தகவல்கள், பதற்றமான செய்திகள் ஆகியவற்றைத் தகர்க்க 150 சமூகத் தலைவர்கள் முழுமூச்சாகக் களமிறங்கினர். நேற்றுக் காலை நடைபெற்ற சமூக அவசரகாலத் தயார்நிலைப் பயிற்சியில், சிங்கப்பூரின் வடக்கு வட்டாரத்திலுள்ள 24 தொகுதி களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மூன்று ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களை முதலில் கையாண்டனர்.

பொங்கோல் கடைத் தொகு தியில் துப்பாக்கிச்சூடு, யீ‌ஷூனில் வாகனத் தாக்குதல், ஜாலான் காயூவிலுள்ள தேவாலயத்தில் குண்டு வெடிப்பு ஆகியன அம் மூன்று பாவனைத் தாக்குதல்கள். இந்தக் கலவரத்தின் மத்தியில், பங்கேற்பாளர்கள் குடியிருப்பாளர் களின் கவலைகளைத் தணித்து, சிங்கப்பூர் காவல்துறை, மத்திய ஊடகங்கள் போன்ற சரியான தகவல் மூலங்களுக்கு அவர்களை வழிகாட்டினார்கள். பல்வேறு இனங்களையும் சம யங்களையும் சேர்ந்த மக்களுக்கு இடையிலான பூசலையும் அவர்கள் சமாளித்தனர். நடிகர்கள் கைச் சண்டை போட்டு அல்லது கருத் துகளைப் பரப்ப பரவலான முயற்சி எடுத்து சச்சரவுக் காட்சிகளை நடித்துக் காட்டினார்கள்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை "எஸ்ஜி பாதுகாப்பு" இயக்கத் தின்கீழ் இதுபோன்ற பயிற்சிளுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால், பொய்ச் செய்திகளில் கவனம் செலுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இணை யத்தில் வேண்டுமென்றே பொய் யான செய்திகள் பரப்பப்படுவது பற்றி அண்மையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு விவாதித்தது. இந்நிகழ்ச்சிக்கு வருகைய ளித்த தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச் சேரி, இன, சமய உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ளுமாறு பங் கேற்பாளர்களுக்கு ஆலோசனை கூறினார். ஏனெனில், உளைச்ச லான சமயங்களில் ஒரு சிறிய அக்கம்பக்க வரம்புமீறல் அல்லது கிண்டல்கூட பெரிய பிரச்சினை யாகத் தலையெடுக்கக்கூடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!