‘இளமைத்தமிழ்.காம்’

மாணவர்கள் பள்ளிக்கு அப்பாலும் மொழியில் தொடர்ந்து ஈடுபடுவதற் கான தளத்தை ஏற்படுத்தியுள்ளது ‘இளமைத்தமிழ்.காம்’. கடந்த 2014 முதல் இணையத் தில் இளையர்களை இணைப்பதில் கவனத்தை செலுத்திவரும் இந்த அமைப்பு, கதை, கட்டுரை, கவிதை, புகைப்படம், காணொளி ஆகிய ஐந்து பிரிவுகளில் மாதந் தோறும் போட்டிகளை நடத்துகிறது. ஆண்டு முழுவதும் மாணவர் கள் தமிழில் தொடர்ந்து பங்களிக்க இது வகைசெய்கிறது. “மாணவர்கள் தங்கள் படைப்பு களைத் தமிழில் தட்டச்சு செய்து சமர்ப்பிக்கின்றனர். இதன்மூலம் அவர்களின் மொழித் திறனும் தமிழ் தட்டச்சு திறனும் வளர்வதை நன்கு உணர முடிகிறது,” என்றார் சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை திருமதி பாஸ்கரன் கங்கா. அவரது மாணவர்களில் பலர் தொடர்ந்து இந்தப் போட்டி களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொள்வதை ஊக்குவிக்க ஒவ்வொரு பிரிவிலும் மாதந்தோறும் ஒருவருக்குப் பரிசு வழங்கப் படுகிறது. தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழு இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கிவருகிறது. “இதுவரை 1,000க்கும் மேலான படைப்புகளை இளமைத்தமிழ்.காம் தளத்தில் மாணவர்கள் எழுதியுள்ள னர். மாணவர்களின் எழுத் தாற்றலை வளர்ப்பதில் கவனம் செலுத்திவரும் இந்த முயற்இணையத்தில் அவர்களை ஈடுபடுத்தி வருவதும் மற்றுமொரு முக்கிய அம்சம்,” என்றார் இந்த இணையத்தளத்தை நடத்தி வரும் திரு பாலுமணிமாறன். “ஒவ்வொரு மாதமும் கிட்டத் தட்ட 100 படைப்புகள் வருகின்றன. “தமிழ்மொழியில் சரளமாக எழுதமுடியாத மாணவர்கள், எழுது வதில் தன்னம்பிக்கை ஏற்படும் வரை புகைப்படம், காணொளி பிரிவுப் போட்டிகளில் கலந்துகொள் கின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்