தமிழ்ப் புழக்கத்தை மேம்படுத்த உதவிய ‘களம்’

மா. பிரெமிக்கா

தமிழ் மொழி விழாவையொட்டி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 'களம் 2018' என்னும் நிகழ்ச்சியை உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் சனிக்கிழமை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், “நம்பி வாங்க சந்தோஷமா போங்க”, “என்னங்க நடக்குது?” ஆகிய இரு போட்டிகள் நடைபெற்றன. “நம்பி வாங்க சந்தோஷமா போங்க” போட்டியில், மாணவர்கள் கொடுக்கப்பட்ட பொருளை வானொலியில் விளம்பரம் செய் வதுபோல் தமிழில் பார்வையாளர் களிடம் விளம்பரம் செய்தனர். இதில் 8 மாணவர்கள் கொண்ட 4 குழுக்கள் பங்குபெற்றன. “என்னங்க நடக்குது? போட்டி யில், மாணவர்கள் கொடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படக் காட்சியைத் தமிழில் நாடகமாகப் படைத்து, பார்வையாளர்களை வசப் படுத்தினர்.

இதில் 21 மாணவர்கள் கொண்ட 5 குழுக்கள் பங்குபெற்றன. இரு போட்டிகளிலும் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி முதல் பரிசையும் ராஃபிள்ஸ் கல்வி நிலையம் இரண்டாம் பரிசையும் தட்டிச் சென்றன. “நம்பி வாங்க சந்தோஷமா போங்க” போட்டியில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரி யும் “என்னங்க நடக்குது?” போட்டி யில் நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியும் மூன்றாம் இடங்களைப் பிடித்தன. மெரிடியன் தொடக்கக் கல்லூரியும் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் ஆறுதல் பரிசுகளை வென்றன.

அவாண்ட் நாடகக் குழுவின் நிறுவனர் திரு ஜி செல்வநாதன், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி திரைப்பட ஊடகப் பிரிவின் மூத்த நிர்வாகியான திரு அருணாச்சலம் இரணியன், திருமதி விக்னேஷ்வரி வடிவழகன் ஆகியோர் இரு போட்டிகளுக்கும் நடுவர்களாகப் பணியாற்றியர். பார்வையாளர் அங்கத்தில் பல விளையாட்டுகளும் போட்டிக்கான வாக்களிப்பும் இடம்பெற்றது நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தது. “நம் நாட்டின் நான்கு அதிகாரத் துவ மொழிகளில் ஒன்றான தமிழ்மொழியின் நிலைப்பாட்டை உறுதி செய்வதில் அடுத்த தலைமுறைத் தலைவர்களான மாணவர்களுக்குப் பெரும் பங்குண்டு. ஆதலால் வகுப்பறை களைத் தாண்டி தமிழின் அன்றாட பயன்பாட்டை அதிகரிப்பதே நமது இலக்காகக் கொண்டு பேச்சுத் தமிழை இந்நிகழ்ச்சியின் மூலம் வலியுறுத்த விழைந்தோம்,” என்று தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் தலைவர் ஹலிடா தன்வீர், 23, கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்