‘மூத்த வீரர்களைச் சுந்தரம் சரிவரப் பயன்படுத்தவில்லை’

தேசிய காற்பந்து தலைமைப் பயிற்றுநர் பதவியிலிருந்து சுந்தரமூர்த்தி விலக வேண்டிய கட்டாயம் வந்ததற்கு அவர் மூத்த வீரர்களைச் சரிவரப் பயன்படுத் தாததுதான் என்று கூறப்படுகிறது. எஸ்லீக் காற்பந்துப் போட்டி களில் 2016ஆம் ஆண்டு அதிக கோல்களைப் போட்ட ஃபாரீஸ் ஃபார்ஹான் என்ற வீரர் தேசிய காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லாமல் இருந்ததை இதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டப்படுகிறது.

லயன்ஸ் குழு வீரர்கள் கோல் போட திக்கித் திணறும் நிலையி லும் இவரை விளையாட அழைக் காதிருந்தது பலருக்குப் புரியாத புதிராகவே இருந்தது. இதுபோல், முன்னாள் தேசிய காற்பந்துக் குழுவின் தலைவரான ஹாருல் இஷாக் சென்ற ஆண்-டு எஸ்லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடியபோதும் லயன்ஸ் குழுவில் இடம்பெறவில்லை. இதுபற்றிக் கருத்துக் கூறும் ஷரில், "புதிதாகப் பயிற்றுநர் பெறுப்பேற்பவர் புது உத்திகள், குழு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் வீரர்களின் கோல் போடும் திறனைக் கருத்தில் கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத் துவார் என்று நம்புகிறேன்," என்று கூறுகிறார்.

"பயிற்சியில் பந்தைத் தக்க வைத்துக்கொண்டு பின்னர் தாக்குதலில் இறங்கும் உத்தியைக் கையாள்வோம். ஆனால், போட்டி களில் எச்சரிக்கையாக விளையாடி தற்காப்பில் அதிக கவனம் செலுத்தி பின்னர் தூரத்தில் வீரர்களுக்கு பந்தை எட்டி உதைப் போம்," என பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒருவர் கருத் துரைத்தார். இவை எல்லாம் ஒருபுறமிருக்க, "சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் சுந்தரமூர்த்தி மீது நம்பிக்கை வைத்து அவரைப் பயிற்றுநராகத் தொடர அனுமதித்திருக்க வேண் டும்," என எமிரிக் ஓங் என்ற வீரர் கூறுகிறார். "நாங்கள் மெது மெதுவாக முன்னேறி வந்துகொண்டிருந் தோம். இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட் டாயத்திற்கு ஆளாகி அவர் விலக வேண்டி வந்துள்ளது. "நாங்கள் இன்னும் கொஞ்சம் முனைப்புடன் விளையாடி இருக் கலாம். ஆனால், இதில் சுந்தரத்தைக் குறைகூற முடியாது. ஏனெனில், காற்பந்துக் குழு நிலையிலும் லயன்ஸ் XII அணியிலும் அவரு டைய இந்த உத்திகள் வெற்றியைத் தேடித் தந்துள்ளன," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!