வரதனுக்கு தமிழவேள் விருது

அப்துல் மாலிக்

சிங்கப்பூரின் மூத்த நாடகக் கலைஞரும் கலாசாரப் பதக்கம் பெற்றவருமான திரு ச.வரதனுக்கு இந்த ஆண்டு தமிழவேள் விருது வழங்கி கௌரவித்துள்ளது சிங் கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம். சிங்கப்பூரில் தமிழ் மொழி, இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் சிங்கப்பூரில் தமிழ் மொழி தழைத்தோங்க வழி வகுத்த தமிழவேள் கோ.சாரங்க பாணி பெயரில் விருதை வழங்கி வருகிறது எழுத்தாளர் கழகம். இந்த விருதைப்பெறும் 30வது படைப்பாளர் திரு வரதன். கடந்த சனிக்கிழமை நடந்த எழுத்தாளர் கழகத்தின் 23வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்ற கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் இணை பேராசிரியர் முகமது ஃபைசல் இப்ராஹிம் திரு வரதனுக்கு நான்கு பவுன் தமிழவேள் விருதை அணிவித்துச் சிறப்பித்தார்.

84 வயதான திரு வரதன் ஏறக்குறைய 60 ஆண்டு காலமாக நாடகத்துறையில் ஈடுபட்டுள்ளார். 1953ல் வானொலி நாடகங்களில் பங்கெடுக்கத் தொடங்கிய திரு வரதன் தொடர்ந்து மேடை நாடகங் களையும் படைத்தார். சிங்கப்பூர் கலைஞர் சங்கத்தின் மூலம் பல மேடை நாடகங்களை மேடையேற்றி யிருக்கும் அவர் சிங்கப்பூர் மேடை நாடக வரலாறு உட்பட 12 நூல் களையும் எழுதியுள்ளார்.

நாடகக் கலைஞர் திரு வரதனுக்கு தமிழவேள் விருதை வழங்குகிறார் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் இணை பேராசிரியர் முகமது ஃபைசல் இப்ராஹிம் (நடுவில்). இடதுகோடியில் சிங்கப்பூர் எழுத்தாளர் கழக செய லாளர் சுப.அருணாசலம், நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் திரு ஆர்.தினகரன். வலதுகோடியில் சிறப்புப் பேச்சாளர் திரு பாரதி கிருஷ்ணகுமார், எழுத் தாளர் கழகத் தலைவர் திரு நா.ஆண்டியப்பன். படம்: நாதன் ஸ்டூடியோ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!