தர்மன்: தாராள வர்த்தகம் கற்றுக்கொள்ள உதவும்

அமெரிக்கா-சீனாவுக்கு இடைப் பட்ட பிரச்சினை உலக வர்த்தகப் போராக பரிணமிக்கும் மிரட்டல் இருந்தாலும் ஆசியா அதற்குப் பயந்து தனியாக ஒதுங்கிவிடக் கூடாது என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத் திக் கூறியிருக்கிறார். உள்கண்ணோட்ட அணுகு முறையை நாம் தொடங்கிவிட வேண்டும் என்பதற்கான அறிகுறி யாக வர்த்தகப் போர் மிரட்டலைக் கருதக்கூடாது என்று திரு தர்மன் குறிப்பிட்டார். ஆசிய நாடுகள் தங்களுடைய பொருளியலைத் தொடர்ந்து திறந்துவிடவேண்டும் என்றார் அவர். ஹெச்டி-மின்ட்ஆசியா தலைமைத்துவ உச்சமாநாட்டில் திரு தர்மன் நேற்று உரையாற்றினார்.

கலை, அறிவியல், தொழில்நுட் பத் துறைகளைச் சேர்ந்த தலை வர்களும் கல்வித் துறையாளர்களும் அரசியல்வாதிகளும் அந்த உச்சநிலை மாநாட்டில் ஆசியா வின் எதிர்காலம் பற்றி விவாதித் தனர். அந்த மாநாட்டிற்கு இந்தியா வின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் போன்ற அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர பகிரங்க அறிவிப்புகளை விடுத்து உலக வர்த்தகப் போர் அச்சத்தைக் கிளப்பிவிட்டு இருக் கின்றன. இந்தச் சூழலில் திரு தர்மன் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார். ஆசியாவில் ஏற்றுமதியை முக் கியமாக கொண்டுள்ள நாடுகளில் உற்பத்தித்திறன் அதிவேகமாக பெருகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய திரு தர்மன், இதன் காரணமாக வாழ்க்கைத் தரம் சிறந்து விளங்கு வதாகக் கூறினார்.

ஆகையால் பொருளியலை திறந்துவிடுவது என்பது சந்தைகளை மட்டும் சார்ந்தது அல்ல. பலவற்றையும் கற்றுக்கொள்வதற் கும் அது உதவும் என்று திரு தர்மன் குறிப்பிட்டார். ஆசியா தன் பொருளியலைத் திறந்துவிடுவதை நிறுத்திவிடக் கூடாது என்று வலியுறுத்திய திரு தர்மன், ஆசியாவின் பல பகுதி களிலும் வேலை வாய்ப்பு பிரச் சினையே மிக முக்கிய முன்னுரிமை யாகத் தொடர்ந்து இருந்து வரு வதை சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!