மின்ஸ்கூட்டர் மோதி 6 வயது பையன் காயம்

பொங்கோல் பார்க் அருகே வியாழக்கிழமை மாலை நேரத்தில் மின்ஸ்கூட்டர் ஓட்டிவந்த ஒருவர், ஆறு வயதுப் பையன் மீது மோதிவிட்டார். அந்தச் சம்பவத் தில் அந்தச் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டது. அப்பர் சிராங்கூன் கிரசெண் டில் இருக்கும் புளோக் 470Aல் மாலை சுமார் 7.15 மணிக்கு, அலட்சியமாக மின்ஸ்கூட்டரை ஓட்டிவந்து ஒருவர் ஒரு பைய னுக்கு காயத்தை ஏற்படுத்திவிட் டார் என்று போலிசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சிறுவன் சுயநினைவு டன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங் கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. மின்ஸ்கூட்டரை ஓட்டி வந்த ஆடவருக்கு 40 வயது இருக்கும் என்று தெரிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

விபத்துக் காரணமாக மின் ஸ்கூட்டரின் சக்கரங்களும் கைப்பிடிக் கம்பியும் நசுங்கிப் போனதாக ‌ஷின் மின் நாளிதழ் தெரிவித்துள்ளது. அந்தப் பையன் பின்புறமாக வந்த மின்ஸ்கூட்டரில் அடிபட்டு விட்டதாக அந்தச் சீன மொழிச் செய்தித்தாள் தெரிவித்தது. பிறகு அந்த ஆடவர் பையனின் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இதன் தொடர்பில் நேற்றுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. போலிஸ் விசாரணை தொடர் கிறது. வியாழக்கிழமை மாலை யில் இத்துடன் இரண்டு மின் ஸ்கூட்டர் தொடர்பான விபத்து கள் நிகழ்ந்துள்ளன. பாசிர் ரிஸ்சில் இத்தகைய விபத்து ஒன்றில் 11 வயது சிறுமி காயமடைந்துவிட்டார்.

இதன் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து இத்தகைய வாகனங்களுக்கு உரிய கட்டாய மூன்றாம் தரப்பு காப்புறுதிப் பாது காப்பு தொடர்பிலான தனது நிலையை போக்குவரத்து அமைச்சு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று நேற்று பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சைனல் சப்பாரி வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!