புத்தாண்டு குதூகலத்தில் லிட்டில் இந்தியா

முஹம்மது ஃபைரோஸ்

விளம்பி சித்திரைப் புத்தாண்டை இன்று குதூகலத்துடன் வரவேற்க நேற்று லிட்டில் இந்தியாவில் ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பலகாரங்கள், காய் கறிகள், உணவு என பண்டிகைக் குத் தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டனர். நேற்று வாரநாளாக இருந்த போதிலும் அந்த வட்டாரமே பரபரப்பாகக் காட்சியளித்தது. எங்கும் மக்கள் கூட்டத்தையும் வாகனங்களின் நீண்ட வரிசை யையும் காண முடிந்தது.

கூட்ட நெரிசலையும் வெப்பமான வானி லையையும் பொருட்படுத்தாமல் பலரும் விறுவிறுப்புடன் பொருட் களை வாங்கிக்கொண்டிருந்தனர். குறிப்பாக, தேக்கா சந்தை, பஃப்ளோ சாலை, கேம்பல் லேன்- போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டுக் கொண்டாட்டம் தமிழர் பாரம்பரியத்தில் முக்கிய இடம்பிடிப்பதால் இந்தப் பண்டிகையைச் சொந்தபந்தங்க ளுடன் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதுவும் இம்முறை புத்தாண்டு வார இறுதியில் வருவதால் வீடுகளில் பண்டிகை உணர்வு மேலோங்கும் என பலரும் கூறினர். குறிப்பாக, பிள்ளைகள் இருக் கும் வீடுகளில் கொண்டாட்டம் மேலும் களைகட்டும். கொண்டாட்டத்திற்குத் தேவை யான பொருட்களை வாங்க லிட்டில் இந்தியாவுக்கு வந்தவர் களில் குமாரி சுஹா‌ஷினி மிட்ரீனா வும் அவரது தாயார் திருமதி தேவினா சிவராஜாவும் அடங்குவர். புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தி லிருந்து நண்பகல் வாக்கில் வந்திருந்த அவர்கள், காய்கறிகள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்ட வற்றை வாங்கினர். 29 வயது குமாரி சுஹா‌ஷினி, பணியிலிருந்து ஒரு நாள் விடுப்பு எடுத்ததாகக் கூறினார். அத்துடன், ஒரு வயதாகும் தமது அக்கா மகன் வானவராயன் ஜெய்யை அழைத்து வந்திருந்ததில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி.

"தமிழர் பண்டிகைகளில் ஒன் றான புத்தாண்டை வழிபாடு, கொண்டாட்டங்கள் ஆகிய வற்றுடன் தித்திப்புடன் வரவேற்பது எங்களது பாரம்பரியத்தில் வேரூன் றியுள்ளது," என்ற அவர், நெருங் கிய உறவுகளுடன் இப்பண்டி கையை ஆவலுடன் எதிர்பார்ப்ப தாகச் சொன்னார். சித்திரை மாதம் பிறந்ததும் இளவேனில் காலம் எனும் வசந்த காலம் தொடங்குகிறது என்றார் தமது மனைவி சரோஜினியுடன் லிட்டில் இந்தியாவுக்கு வந்திருந்த திரு கோ. வைத்தியலிங்கம், 63.

சித்திரைப் புத்தாண்டு கொண் டாட்ட உணர்வில் திளைப்பது ஒரு தனி அனுபவம் என்றார் அவர். "விலைவாசி அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் மக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், இங் குள்ள பெருங்கூட்டத்தைப் பார்க் கையில் அப்படித் தெரியவில்லை," என்றார் இல்லத்தரசியான திரு வாட்டி திருச்செல்வி பாக்கிய லெட்சுமி, 59. எவ்வளவு செலவுகள் ஏற்பட்டாலும் புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட விரும்புகின்றனர் என்பதை இது காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

தமிழர்கள் கொண்டாடும் சித் திரைப் புத்தாண்டுடன் சீக்கியர்களின் வைசாகி பண்டிகையும் மலையாளிகளின் வி‌ஷு புத்தாண் டும் கொண்டாடப்படுகின்றன. அதனால் ஏராளமானவர்கள் நேற்று புத்தாண்டு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். பெரும்பாலான இந்தியப் புத்தாண்டுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வருவதால் இந்திய புத்தாண்டுகள் கொண்டாட்டத் திற்கு லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடை மைச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நேற்று மாலை இந்திய கலை நிகழ்ச்சிகள் கேம்பல் லேனில் நடைபெற்றன. இன்றும் நாளையும் சிங்கப்பூர் இந்திய மரபுடைமை நிலையத்தில் காலை முதல் மாலை வரை பல் வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் புத்தாண்டுக்காக பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் லிட்டில் இந்தியாவில் திரண்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!