You are here

‘பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’

வி. அருள் ஓஸ்வின்

ஆடல், பாடல், நடிப்பு, பேச்சு என்று நவரச விருந்தாக 38வது தமிழர் திருநாள் விழா மற்றும் 58வது ஆண்டு மாதவி இலக்கிய மன்ற விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் மாதவி இலக்கிய மன் றத்தின் ஏற்பாட்டில் நடந்தேறின. சிறார்கள் மேடையேற்றிய நிகழ்ச்சிகளில் ஒன்றான குறவன் குறத்தி ஆட்டம், கரகாட்டம், பரதநாட்டியம் என்று இந்திய பாரம்பரிய நடனங்களின் படைப்பு சிறப்பாக இடம்பெற்றது. சுமார் 20 சிறார்கள் வரிசையாக நின்று ‘தமிழில் ஐந்து’ என்ற தலைப்பில் ஐம்பெரும் காப்பியங்கள், ஐந்து நிலப்பகுதிகள் என்று தொடர்ச்சியாக ஒருவருக்குப்பின் ஒருவராக கோவையாகப் பேசினர்.

இந்த அங்கத்தை ஒருங் கிணைத்த சித்ரா மெய்யப்பன், 40, மக்கள் அதிகம் அறியாத கருத்து களைச் சுவாரசியமாக எடுத்துச் சொல்லும் முயற்சி இது என்று கூறினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந் தினராக சட்ட, உள்துறை அமைச் சர் கா. சண்முகம் கலந்துகொண்டு சிறப்பித்தார். சிறப்புப் பேச்சாளர்களாக தமிழ் நாட்டின் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி விஸ்வநாதனும் எழுத்தாளரும் நடி கரும் இயக்குநருமான ‘அரட்டை அரங்கம்’ புகழ் திரு விசுவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

‘தமிழ் தேசம்’ என்ற தலைப்பில் பேசிய திரு விஸ்வநாதன், சிந்து சமவெளி நாகரிகத்தில் ஆரம் பித்து மதுரை தமிழ் சங்கங்களைத் தொட்டு, 20ஆம் நூற்றாண்டின் தமிழ் அரசியலில் முடித்து தமிழின் தொன்மையையும் பெருமையையும் பார்வையாளர்கள் முன்னிலையில் பறைசாற்றினார். இன்றைய தமிழ் தலைமுறை யினரின் பெயர்கள் பெரும்பாலும் வட இந்திய பெயர்களாக இருப் பதைச் சுட்டிகாட்டிய அவர், வருங் கால சந்ததியினருக்குத் தமிழ் பெயர்களைச் சூட்டவேண்டும் என்று பார்வையாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

அவருக்கு அடுத்து பேசிய திரு விசு தனது நகைச்சுவை ஆற்றலால் அரங்கத்தை சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடித்தார். நிகழ்ச்சியின்போது வாழ்க் கையில் மகிழ்ச்சி என்றால் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டது. ‘சந்தோஷம், நிம்மதி, திருப்தி என்று மகிழ்ச்சியை வகைப்படுத்த லாம். இளம்பருவத்தில் ஏற்படுவது சந்தோஷம். முதுமையில் அடைவது நிம்மதியும் திருப்தியும்,’ என்று அவர் பதிலளித்தார்.

இருபது ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த ‘அரட்டை அரங்கம்’ என்ற மேடைப் பேச்சு நிகழ்ச்சி நாளடைவில் ஒரு சமுதாய இயக்க மாக மாறி, அறக்கட்டளையின் மூலம் 100 வசதி குறைந்த இளை யர்களைப் பொறியாளர்களாக உருவாக்கிய மாபெரும் சமுதாயப் புரட்சியாக முடிந்ததை திரு விசு சுட்டிக்காட்டினார். தனது வாழ்க்கையில் சந்தித்த குடும்ப சிக்கல்களையும் தற்போது சில ஆண்டுகளாகச் சந்தித்து வருகிற உடல்நலப் பிரச்சினை களையும் பகிர்ந்துகொண்ட அவர், அவற்றிலிருந்து மீண்டு புத்து ணர்ச்சியுடன் செயலில் இறங்கப் போவதாகக் கூறினார்.

நிகழ்ச்சி முடிவில் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதை விசுவுக்கு வழங்கி மாதவி இலக்கிய மன்றம் அவரைக் கௌரவித்தது. ‘மக்கள் தொண்டர்’ என்ற மற்றொரு விருது, பொறியாளரும் தமிழ் ஆர்வலருமான தியாகராஜன் ரமே‌ஷுக்கு வழங்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு சிங்கப் பூருக்கு குடிபெயர்ந்த திரு ரமேஷ் புகைப்படம் எடுக்கும் தம் ஆர் வத்தை பொதுத்தொண்டாக தமிழ் அமைப்புகளுக்கு செய்து வருகிறார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் கோவிந்தன் அடுத்த ஆண்டு பல இன கலா சாரத்தைப் பற்றிய புரிந்துணர்வை அதிகரிக்கும் வண்ணம் அம்சங் கள் அமையும் என்று தெரிவித்தார்.

மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் திரு என்.ஆர். கோவிந்தன், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர். தினகரன், சிறப்புப் பேச்சாளராக வருகை புரிந்த திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா திரு விசு, அவரது துணைவியார். படம்: சுந்தர் குஞ்சிதபாதம்