அமெரிக்காவை ‘டிபிபி’யில் இணைக்க பேச்சுவார்த்தை

தோக்கியோ: அமெரிக்காவுடன் ஜப் பான் அடுத்த வாரம் மாநாடு ஒன்றில் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள் வதற்காக புதிய பணிச்சட்டம் ஒன்றை உருவாக்க உள்ளது. அமெ ரிக்காவை மீண்டும் 'டிரான்ஸ் பசிஃபிக்' பங்காளித்துவத்தில் (டிபிபி) இணைக் கும் நம்பிக்கை யுடன் இந்தப் பேச்சுவார்த்தை மேற் கொள்ளப்பட இருப்பதாக நிக்கேய் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. ஆனால், பங்காளித்துவத்தில் இணைவதற்கான நிபந்தனைகளை மாற்றுவதை அல்லது இருதரப்பிலும் தாராள வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கோரலாம் என்று கூறப்படுகிறது. இவ்விரு அம்சங்களையும் ஜப்பான் தவிர்க்க விரும்புவது குறிப்பிடத் தக்கது.

ஜப்பான் நிதி அமைச்சர் டோ‌ஷிமிட்சு மோடெகி, அமெரிக்கா வின் வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லைதிஸர் ஆகியோரின் தலைமை யிலான குழுக்கள் பேச்சுவார்த்தை யில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது. ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபே, திரு டிரம்ப் ஆகியோர் கடந்த ஆண்டு அமைத்த இருதரப்பு பொருளியல் உரையாடல் பணிச் சட்டத்திலிருந்து இது மாறுபட்டது. அமெரிக்காவில் ஜப்பானின் நேரடி முதலீட்டுத் திட்டங்கள் பற்றி டிரம்பிடம் அபே மாநாட்டில் எடுத் துரைப்பார் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!