1எம்டிபி ஊழல் தொடர்பில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

கோலாலம்பூர்: மலேசிய முதலீட் டாளரான ஜோ லோ என அழைக் கப்படும் லோ டயேக் ஜோவையும் 1எம்டிபி நிதி ஊழலில் தொடர் புடையவர்களையும் கைது செய்யக் கோரி மலேசிய இளையர் ஆர்வலர் குழு ஒன்று நேற்று மத்திய கோலாலம்பூரில் திரண்டது. கலைந்துசெல்லும்படி போலிசார் இட்ட கட்டளையையும் எதிர்த்து கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் சோகோ கடைத்தொகுதியில் நடத் தப்பட்ட இந்தப் பேரணியில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். 'மலேசியாவைக் காப்பாற்று, திருடர்களைக் கைதுசெய்' என்று பொருள்படும் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளை கூட் டத்தில் கலந்துகொண்டவர்கள் கையிலேந்தி இருந்ததாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. திரு ஜோ லோவைத் திரு டனைப்போல சித்திரிக்கும் பதா கைகள், பாரிஸ் ஹில்டனின் உருவபொம்மை போன்றவற்றை ஏந்தியிருந்த இளையர், அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்க மலேசியர்களை அழைக்கும் பாடல் கள் பாடப்பட்டன.

'ஜோ லோவைக் கைதுசெய்' என்று கூட்டத்தினர் முழக்க மிட்டனர். போராட்டத்துக்கு போலி சார் அனுமதி அளித்த போதும் அணிவகுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. வர்த்தகரும் 1எம்டிபியின் முன் னாள் அதிகாரபூர்வமற்ற ஆலோ சகருமான திரு லோ, பில்லியன் கணக்கில் பண மோசடி செய்யப் பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப் பட்டார். அந்தப் பணம் பல்வேறு நாடுகளில் ஆடம்பர சொத்துகள் வாங்குதல், திருவாட்டி ஹில்டன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற தாராளமான உபசார விழாக்கள், வின்சென்ட் வான் கோக், க்ளாட் மோனெட் போன் றோரின் மதிப்புமிக்க கலைப் பொருட்களை வாங்குதல் ஆகியவற்றில் செல விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சியான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பார்ட்டி அமனா நெகரா கட்சியின் தலைவர் முகமது சாபு இளையர்கள் எழுச்சி பெறவேண் டும் என்று நேற்றைய கூட்டத்தில் குறிப்பிட்டார். "மே 9க்குப் பிறகு நாங்கள் ஆட்சிபுரிவோம். 'எம்ஓ1' மற்றும் ஜோ லோவைக் கைதுசெய்ய ஆணை பிறப்பிப்போம்," என்று சாபு கூறினார். 1எம்டிபியிலிருந்து திருடப்பட்ட பணத்தையும் சொத்து களையும் மீட்பதற்கான 2016ஆம் ஆண்டின் வழக்கில் அமெரிக்க நீதித்துறை 'எம்ஓ1' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியது. 'எம்ஓ1' என்பது மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.

திரு நஜிப்பின் மனைவியின் மகனான ரிஸா அஸிஸுக்கு திரு லோ நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. திரு நஜிப்பின் வங்கிக் கணக்கில் 700 மில்லியன் அமெரிக்க வெள்ளியை சவூதியின் அரசகுடும்பம் நன்கொடை அளித் ததாகக் கூறப்பட்டதை அடுத்து திரு நஜிப் 1எம்டிபி வழக்கின் தொடர்பிலிருந்து விடுவிக்கப் பட்டார். நேற்று 2 மணி நேரம் நீடித்த கூட்டத்தின் முடிவில் திரு லோ வைக் கைது செய்யக் கோரும் மனு ஒன்று போலிசாரிடம் அளிக் கப்பட்டது. அதனை மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படது.

படகு போன்று அலங்கரிக்கப்பட்ட டிரக் ஒன்றில் இருந்தவாறு எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த திரு சாபு கூட்டத்தினரிடையே உரை நிகழ்த்தினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!