சிப்பாய்கள் பற்றிய வரலாற்று நூல் அறிமுகம்

வி.கே. சந்தோஷ் குமார்

முதலாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் மலாயாவில் பாடுபட்ட சிப்பாய்களைப் பற்றிய புதிய நூல் நேற்று 'தி ஆர்ட்ஸ் ஹவுஸில்' அறிமுகம் கண்டது. வழக்கறிஞராக பணிபுரிந்து பிறகு எழுத்தாளரான திரு நமசிவாயம் நெடுமாறன், 350 பக்கங்கள் கொண்ட இந்த வரலாற்று நூலை எழுதியுள்ளார். "தற்போது அரும்பொருளக மாக உள்ள ஃபோர்ட் கேனிங் குன்றின் இரண்டாம் உலகப் போர் கீழ்த்தள நடவடிக்கை தளபத்தியமான 'தி பேட்டல் பாக்ஸில்' பொறுப்பாளராக இருந்தபோது எனக்குள் இந்த நூலை எழுதுவதற்கான சிந்தனை எழுந்தது. சிறு வயதிலிருந்தே இரண்டாம் உலகப் போரின் நினைவுப் பொருட்களை சேகரிப் பதை என்னுடைய பொழுதுபோக் காக நான் வைத்திருந்தேன். பின்னர் அதுவே ஒரு வைராக்கிய மாக மாறியது," என்றார் நூலாசி ரியர் திரு நெடுமாறன். சிப்பாய்களின் வாழ்க்கையை மக்கள் அறிந்துகொள்வதற்கு இந்நூல் வகைசெய்யும்.

நேற்று மாலை நடந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தெற்கு ஆசிய கல்விக் கழகத்தின் தலைவரான தூதர் கோபிநாத் பிள்ளை சிறப்பு விருந்தினராகவும் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஜாவெத் அஷ்ரஃப் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தின் கௌரவ தலைவர் திரு கே. கேசவபாணி நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அறிமுக உரையை ஆற்றினார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்வித் துறையின் தற் காலிக தலைவர் இணைப் பேராசி ரியர் ராஜேஷ் ராய் தலைமையிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!