தங்கம் வென்றார் பத்ரா

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான மகளிர் மேசைப்பந்து ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் மணிக்கா பத்ராவிடம் சிங்கப்பூரின் யூ மெங்யு நேற்று தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் யூ மெங்கயு வெள்ளிப்பதக்கம் பெற் றார். இப்பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமை 22 வயது பத்ராவைச் சேரும். 11-=7, 11=6, 11=2, 11=7 எனும் நேர்செட்டுகளில் யூ மெங்யுவைத் திணறடித்து தங்கத்தைத் தட்டிச் சென்றார் பத்ரா.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆதிக்கம் செலுத்திய பத்ராவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மெங்யு திண்டாடினார். மின்னல் வேகத் தாக்குதல் களை நடத்திய பத்ரா, பந்தை அனைத்து திசைகளிலும் பறக்க விட்டார். தமக்கு எதிராகக் களமிறங்கும் வீராங்கனையைக் குழப்பும் அவரது 'ஃபிலிப் பேட்' அணுகுமுறையும் பத்ராவுக்குப் பெரிதும் கை கொடுத்தது. பந்து அடுத்து எந்த திசை நோக்கி அனுப்பப்படும் என்பதை எதிர்தரப்பு வீராங்கனை கணிக்க முடியாமல் இருக்க பத்ரா இந்த அணுகுமுறையைக் கையாள்கிறார். இது அவரது பலங்களில் ஒன்று. நேற்று பிற்பகல் நடைபெற்ற அரையிறுதியில் சிங்கப்பூரின் மற்றொரு வீராங்கனையான ஃபெங் தியேன்வையையும் பத்ரா வீழ்த்தியிருந்தார். ஃபெங் தியேன் வை வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

சிங்கப்பூரின் யூ மெங்யுவைத் திக்குமுக்காட வைத்த இந்தியாவின் மணிக்கா பத்ரா. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!