கிர்ணிப்பழம் சாப்பிட்ட இருவருக்கு கிருமித்தொற்று

'ராக் மெலன்' எனப்படும் கிர்ணிப் பழம் சாப்பிட்ட இருவருக்கு ஆஸ்திரேலியாவில் லிஸ்டிரியா என்ற ஒருவகை கிருமித் தொற் றால் மரணமடைந்த ஒருவருக்கு இருந்தது போன்ற கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகா தார அமைச்சு நேற்று அறிவித்தது. இதன் தொடர்பில் இந்தக் கிருமியின் மூலத்தை ஆய்வு செய்த தேசிய பொது சுகாதார ஆராய்ச்சிக்கூடம் தனது பணியை முடித்துவிட்டதாக அமைச்சு தனது அறிக்கையில் நேற்று தெரி வித்தது.

இந்த ஆராய்ச்சியிக்கு லிஸ்டிரியோசிஸ் நோய் கண்ட ஐந்து பேரிடமிருந்து பெறப்பட்ட கிருமி வகைகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ஒருவர் மரணமடைந்தார் என்றும் ஆனால் அவர் இந்தக் கிருமித் தொற்று காரணமாக மரணமடைய வில்லை என்று தான் கண்டறிந்த தாக அமைச்சு விளக்கியது. மேலும், கிருமித் தொற்றி லிருந்து ஒருவர் மீண்டுவிட்டார் என்றும் அமைச்சு கூறியது.

லிஸ்டிரியா கிருமித் தொற்று டைய இந்த கிர்ணிப்பழம் ஆஸ்தி ரேலியாவிலிருந்து சிங்கப்பூர் உள்பட ஒன்பது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த கிர்ணிப்பழகங்களை தயாரிக்கும் ஆஸ்திரேலிய நிறு வனம் இவ்வாண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அந்தப் பழங்களை மீட்டுக்கொள்வதாக அறிவித்து இருந்தது. அதேபோல், சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட கிர்ணிப்பழங்களை வேளாண், கால்நடை, மருத்துவ ஆணையம் கடந்த மார்ச் மாதம் அழித்தது. சுகாதார அமைச்சு தான் மேற் கொண்ட ஆராய்ச்சியில் சிங்கப்பூ ரில் ஏற்பட்ட லிஸ்டிரியா தொற்றுக் கும் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட இதுபோன்ற கிருமித் தொற்றுக்கும் இடையே தொடர்பு இல்லை என்று தெரியவந்துள்ளதாகக் கூறியது.

எனினும், இதன் தொடர்பில் மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டதாக அமைச்சின் அறிக்கை தெளிவுபடுத்தியது. இந்த கிருமித் தொற்று கண்ட ஐவரில் இருவருக்கு எஸ்டி 240 என்ற வகையான லிஸ்டிரியா கிருமித் தொற்று இருந்ததாகவும் இது ஆஸ்திரேலிய நோயாளிக்கு கண்டிருந்த கிருமித் தொற்றின் மூலத்தை ஒத்திருந்ததாகவும் தான் கண்டறிந்ததாக அமைச்சு விளக்கியது-. " ஆ ஸ் தி ரே லி யா வி லி ரு ந் து வந்த கிர்ணிப்பழங்கள் மார்ச் மாதம் மீட்டுக்கொள்ளப்பட்டதால் இந்த விவகாரத்தில் பொது சுகாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இனி இல்லை," என்று அமைச்சின் அறிக்கை கூறியது. இதன் தொடர்பில் நிலை மையை தான் அணுக்கமாக கண் காணித்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!