எஸ். வெங்கடேஷ்வரன்
பூக்கடைக்காரர் குமார், 47, வழக்கம்போல் மதிய உணவுக்குப் பிறகு கடைக்குத் திரும்பியபோது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். பஃப்ளோ சாலையில் அமைந்துள்ள நல்லி பிரைவேட் லிமிடெட் கடைக்கும் கோமள விலாஸ் உணவகத்திற்கும் வெளியே அமைந்துள்ள அவரது பூக்கடை அலங்கோலமாகக் கிடந்தது. லிட்டில் இந்தியாவில் நேற்று பிற்பகல் இரண்டு மணி அளவில் நிகழ்ந்த ஒரு விபத்து, அங்கிருக் கும் கடைக்காரர்களை அதிரவைத் தது. ரேஸ் கோர்ஸ் சாலையை நோக்கிச் செல்லும் பஃப்ளோ சாலையில் இருக்கும் பூக்கடை ஒன்றுக்குள் ஒரு கார் கட்டுப் பாட்டை இழந்து புகுந்துவிட்டது.
விபத்திற்குள்ளான வாகனம் ஆறு பேர் அமரக்கூடிய பலபயன் டொயோட்டா கார். அதை ஓட்டியவர் அண்மையில் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்ற மாது என தெரியவருகிறது. ஒரு வழிப்பாதையான இரு தடங்களைக் கொண்டிருக்கும் பஃப்ளோ சாலைக்கு சிராங்கூன் சாலையிலிருந்து இடது பக்கமாகத் திரும்பிக்கொண்டிருந்த வாகனங் களை முந்திச்செல்ல வலது பக்கம் வேகமாகத் தடம் மாறும் முயற்சி யில் ஈடுபட்ட அம்மாது, வேக விசைக்கருவியைச் சற்று பலமாக அழுத்தியதால் அவரால் காரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அது சாலைக்கும் நடைபாதைக்கும் இடையே உள்ள தடுப்பை உடைத் துக்கொண்டு பூக்கடைக்குள் புகுந்தது.
தமிழ் முரசு செய்திக் குழு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தபோது சம்பந்தப்பட்ட அந்த வாகனத்தின் ஓட்டுநர் அங்கு இருந்தார். பதற்றத்துடன் காணப்பட்ட அவர், விபத்து குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்தச் சம்பவத்தில் அந்தப் பூக்கடையில் வேலைசெய்து கொண்டிருந்த மலேசியரான 31 வயது தென்னவன் ஆதியப்பன் இலேசாக காயம் அடைந்தார். பின்னர் அவர் ராஃபிள்ஸ் மருத் துவமனைக்கு அவசர மருத்துவ வாகனத்தில் கொண்டுசெல்லப் பட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து பிற்பகல் 2.20 மணியள வில் சம்பவ இடத்திற்கு வந்தடைந் ததாக சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படை தெரிவித்தது.
பஃப்ளோ சாலையில் அமைந்துள்ள நல்லி பிரைவேட் லிமிட்டெட் கடைக்கும் கோமள விலாஸ் உணவகத்திற்கும் வெளியே அமைந்துள்ள குமார் என்பவரின் பூக்கடைக்குள் கார் புகுந்து இப்படி நின்றது. இந்தச் சம்பவத்தில் அந்தப் பூக்கடையில் வேலைசெய்து கொண்டிருந்த மலேசியரான 31 வயது தென்னவன் ஆதியப்பன் என்பவர் இலேசாக காயம் அடைந்தார். சாலைக்கும் நடையர் வழிக்கும் இடையில் இருக்கும் இரும்புக்கம்பி அடைப்பை உடைத்துக்கொண்டு கார் கடைக்குள் நுழைந்தது. படம்: சுரேஷ்