'தமிழ்மொழி விழா 2018' நிகழ்ச்சிகள் 


இளம் பிறை
நாள்: நாளை வெள்ளிக்கிழமை இரவு 7- 8.30 மணி
இடம்: தேசிய நூலக வாரியக் கட்டடம்.
"இளம்பிறை" என்ற கருப்பொருள் இளமை, வளர்ச்சியைச் சுற்றி சுழல்கிறது. இந்நிகழ்ச்சியில் பல கவிதை வாசிப்புகள் நடைபெறும். ஒவ்வொரு வாசிப்புக்கும் குறிப் பிட்ட இசையும் இசைக்கப்படும்.

சிங்கப்பூர் மாப்பிள்ளை
நாள்: 20 ஏப்ரல் இரவு 8-9.30
21 ஏப்ரல் பிற்பகல் 2-3.30 மணி; இரவு 8-9.30 மணி
22 ஏப்ரல் பிற்பகல் 2-3.30
இடம்: குட்மன் கலை நிலையம்.
"சிங்கப்பூர் மாப்பிள்ளை" என்பது சிங்கப்பூரின் இலக்கியக் காட்சி களுக்குப் பெரிதும் பங்காற்றியுள்ள மறைந்த திரு. சே.வெ.சண்முகம் அவர்களால் எழுதப்பட்ட வானொ லிக் கதையைத் தழுவிய மேடை நாடகம்.

என்ன செய்யலாம்
நாள்: ஏப்ரல் 21 காலை 9.30-11.30 மணி
இடம்: இந்திய மரபுடைமை நிலையம்
"என்ன செய்யலாம்" என்பது 5 முதல் 8 வயது வரையிலான தமிழ் பேசும் மாணவர்களுக்கான நாட கம். மாணவர்களுடன் சேர்ந்து சாகசம், மர்மங்களை அறியவும் கதாபாத்திரங்களைக் காணவும் நிகழ்ச்சியைக் காண இணைந் திடுங்கள்.

பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி/ இலக்கியக் கருத்தரங்கு
நாள்: ஏப்ரல் 21 காலை 8.30- பிற்பகல் 1 மணி
இடம்: யீ‌ஷூன் தொடக்கக்கல்லூரி அரங்கு
இவ்வாண்டின் கருப்பொருள்: "தன்முனைப்பும் சாதனைகளும்" மாணவர்களின் படைப்புகள், நடிகர் பத்மஸ்ரீ விவேக்கின் சிறப் புரை, கருத்தாடல் (உன்னால் முடி யும்), கருத்தரங்கின் வலைப்பக்க வெளியீடு ஆகியன இடம்பெறும்.

பாவேந்தர் 128 -
சுழலும் சொற்போர்

நாள்: ஏப்ரல் 21 காலை 10- பிற்பகல் 1 மணி
இடம்: 'தி பொட்' அரங்கம். தேசிய நூலக வாரியக் கட்டடம்.
தமிழ் இலக்கிய உலகில் மிகவும் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதி தாசனின் பங்களிப்புகளை நிகழ்ச்சி நினைவூட்டுகிறது. இந்த நிகழ்வில் பட்டிமன்றம் முக்கிய ஒன்றாகும், இந்த சுழலும் சொற் போரில் பாவேந்தர் பாரதிதாசன் அவரது படைப்புகளைப் போற்றும் முக்கிய சிந்தனைகள் சில தொகுத்து வழங்கப்படும். சுழலும் சொற்போர் தவிர, தமிழ் மொழிக்கு பங்களித்தமைக்காக இரண்டு தமிழ் ஆர்வலர்களுக்கு "பாவேந்தர் விருது" வழங்கப்படும். வெளி நாட்டு தமிழ் அறிஞர் ஒருவர் பாரதிதாசனின் தொடர் புடைய படைப்புகள், தமிழ் மொழி மீது அவருக்கு இருந்த ஆர்வம் குறித்து உரை நிகழ்த்துவார்.


வண்ணத்தமிழ் 2018
நாள்: ஏப்ரல் 21 காலை 10-பிற்பகல் 12.30 மணி
இடம்: தேசிய நூலக வாரியக் கட்டடம்
இந்த பல்சுவை நிகழ்ச்சியில் நாட் டுப்புறப் பாடல், ஆடல், கும்மியாட் டம், சங்க இலக்கியப் பாடல்களு டன் உரையும் பரிசளிப்பும் விழா வில் இடம்பெறும். திருச்சியில் இருந்து வருகை தந்துள்ள முனைவர் அமிர்தகடேஸ்வரர் 'தமிழ் இலக்கியம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகள்' என்ற தலைப்பில் சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு ஆற்றுவார்.

ஜிங்கில் ஜிகில்
நாள்: ஏப்ரல் 21 பிற்பகல் 1.30- 3
இடம்: இந்திய மரபுடைமை நிலையம்
"ஜிங்கில் ஜிகில்" என்பது பிள்ளை களுடன் பெற்றோரும் சேர்ந்து பங்குபெறும் இசை, நடன நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் பிள்ளைகள் தங் கள் பெற்றோருடன் இணைந்து மறுபயனீட்டுப் பொருட்களில் இருந்து இசைக் கருவிகளைச் செய்வர். பெற்றோரும் பிள்ளை களும் இணைந்து ஒரு பாடலைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அவர்களுடைய இசைக் கருவி களோடு, பாடலுக்கு ஏற்ப உடல் அசைவுகளையும் ஒலிகளையும் மறு உருவாக்கம் செய்வார்கள்.

உரைக்களம்
நாள்: ஏப்ரல் 21 பிற்பகல் 2-5
இடம்: சிங்கப்பூர் நிர்வாக மேம்பாட்டுக் கழகம் (எம்டிஐஎஸ்)
தமிழ் பேசும் சிங்கப்பூர் மாணவர் களின் மனங்களில் புத்தாக்கத் துடன் கூடிய யோசனைகளை விதைத்திட உரைக்களம் விரும்பு கிறது.

உமறுப்புலவர் அரங்கம்
நாள்: ஏப்ரல் 21 பிற்பகல் 3-5
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
இவ்வாண்டு நடைபெறவுள்ள 'உமறுப்புலவர் அரங்கம்' எனும் நிகழ்ச்சி, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் நடத்தும் ஆறாவது தமிழ்மொழி விழாவிற்கான நிகழ்ச்சி. இளைய தலைமுறையினர் தமிழில் பேசுவதற்கும் சிங்கப்பூரில் தமிழ் வாழும் மொழியாக நீடித் திருக்க பெற்றோரின் முக்கிய பங்கினை வலுப்படுத்தவும் சிங்கப் பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் பல்வேறு முறைகளை இந்நிகழ்ச்சி வழி ஆராய்கிறது. இந்த 3 மணி நேர நிகழ்ச்சியில் தமிழ் மொழியைச் சிங்கப்பூரில் செழிக்கப் பங்களிப்பு செய்த 3 அல்லது 4 தனிநபர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.

தமிழர் அறிவியல்
நாள்: ஏப்ரல் 21 மாலை 6-இரவு 9
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
"தமிழர் அறிவியல்" என்ற நிகழ்ச் சியை ஒட்டி உயர் நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி மாணவர் களுக்கான ஆய்வுகள் படைப்புப் போட்டி இம்மாதம் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் உயர்நிலைப் பள்ளியிலிருந்து 60 மாணவர்களும் தொடக்கக் கல்லூரியிலிருந்து 9 மாணவர்களும் கலந்துகொண்டு "தமிழர் அறிவியல் "என்ற தலைப் பில் தங்களின் ஆய்வுகளைப் படைத்தார்கள். இந்தப் போட்டியில் முதல் பரிசை வென்றவர்கள் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் தங்களின் ஆய்வினை படைப்பார்கள். அன்று சிறப்பு பேச் சாளராக முனைவர் வெ.இறையன்பு I.A.S தமிழர் அறிவியல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவார்.

கண்ணதாசன் ஒரு சகாப்தம்
நாள்: ஏப்ரல் 21 இரவு 7-11 மணி
இடம்: தேசிய பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க வளாகம்.
'கண்ணதாசன் ஒரு சகாப்தம்' என்பது பங்கேற்பாளர்களுக்கு அறுபதுகள், எழுபதுகளை ஞாபகப் படுத்தும் பேச்சுகள், நடவடிக்கை கள் அடங்கிய மனதைவிட்டு அகலாத கலை இரவாக அமையும்.
இந்நிகழ்ச்சி உள்ளூர் கலை ஞர்கள், குழந்தைகளுக்கான தள மாக அமையும். அதில் அவர்கள் காலத்தை விஞ்சிய கண்ணதாசன் பாடல்களுக்கு நடிக்கலாம், இணை உருவாக்கம் செய்யலாம். மேலும் இந்த நிகழ்ச்சி அவர்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பினை வழங்கும்.

தமிழவேள் விழா
நாள்: ஏப்ரல் 22 காலை 10-பகல்1
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
"தமிழவேள் விழா" என்பது தமிழ வேள் திரு. கோ.சாரங்கபாணி அவர்களின் 115வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் நினைவாக நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழகம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி, தேசிய பல்கலைக்கழக மாணவி கள் வி. ஹரிணி, அஸ்வினி செல்வராஜ் ஆகியோரின் பேச்சுகள் இடம்பெறும். தமிழவேள் அவர்கள் தன் இலக்கிய வாழ்க்கைத்தொழில் மூலம் சிங்கப்பூர் இந்தியச் சமூகம், தமிழ்க் கல்வி, தமிழர் திருநாள் கொண்டாட்டம் ஆகியவற்றுக்குச் செய்த பங்களிப்புகளைத் தலைப்பு கள் உள்ளடக்கியிருக்கும்.

ஜிங் ஜாக் நாடகம்
நாள்: ஏப்ரல் 22 பிற்பகல் 3 மணி
இடம்: 'நமது தெம்பனிஸ்' நடுவம்
"ஜிங் ஜாக் நாடகம்" மூன்று நண்பர்களின் கதையைக் காட்சிப் படுத்துகிறது. ராடின் மாஸ் என்ற இளவரசி, ஜிங் என்ற மனம் தளர்ந்த மயில், ஜக் என்ற பைய னாக மாறிய குதிரை ஆகியோர் அந்த 3 நண்பர்கள். இந்த நாடகம் பொம்மலாட்டம், இசை நாடகம் ஆகிய 2 பாரம்பரிய நாடக உத்தி களைப் பயன்படுத்தும்.

'வெற்றிக் கொடி கட்டு'
நாள்: ஏப்ரல் 22 மாலை 6-இரவு8
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
ஜமால் முஹம்மது கல்லூரி முன் னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), பர்வீன் சுல் தானா வழங்கும் "வெற்றிக்கொடி கட்டு" எனும் தன்முனைப்புச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய் துள்ளது. சென்னையிலுள்ள நீதி பதி ப‌ஷீர் அகமது மகளிர் கல் லூரியின் தமிழ்த்துறைப் பேரா சிரியர், தொலைக்காட்சிப் புகழ் முனைவர் பர்வீன் சுல்தானா சிறப்புரையாற்றுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!