பசுத்தோல் போர்த்திய புலிகள் யார்? - விஜயகாந்த் கேள்வி

பேராசிரியை நிர்மலா மாணவி­களுக்­குப் பாலியல் வற்புறுத்தல் அளித்த விவகாரத்தில், நீதிமன்­றத்­தின் நேரடிக் கண்காணிப்பில் நேர்மை யான அதிகாரிகளைக் கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேமு­திக தலைவர் விஜயகாந்த் வலி­யுறுத்தியுள்ளார். "சிறுமிகள் முதல், மாணவி கள், குடும்பப் பெண்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் பாலியல் வன்புணர்வுக்கு உட் படுத்துவது இந்தியா முழுவதும் தொடர்கதையாக உள்ளது. இது போன்றவற்றைத் தடுத்து நிறுத்த சட்டங்கள் மூலம் கடும் தண் டனைகளை வழங்கவேண்டும். பேராசிரியை நிர்மலாதேவியின் கைதும், அவருக்குக் கிடைக்கக் கூடிய தண்டனையும் எதிர்காலத் தில் யாரும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கவேண்டும்.

மேலும் இதில் மத்திய அரசின் ஆதரவில் இருக்கின்ற தமிழக ஆளுநர் சந்தேக வளையத்திற்குள் இருப்பதால், சிபிஐ கூட இதை நேர்மையாக விசாரிக்குமா என் கிற சந்தேகம் இயல்பாகவே எழு கின்றது. ஆகவே நிர்மலாதேவி இதுபோன்ற கீழ்த்தரமான செயல் களில் தொடர்ந்து ஈடுபட்டிருந் தாரா, அவரின் பின்னணியில் உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள் போன்ற சக்திவாய்ந்த, அதிகாரமிக்கவர்கள் யார், யார் என்பதைக் கண்டறிய, நீதிமன்­றமே தானாக முன்வந்து தனது நேரடிக் கண்காணிப்பில் மிக நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து, உண்மைகளைக் கண்டறிந்து இந்நாட்டு மக்க­ளுக்கு வெளிப்படையாக தெரி வித்­தால்­தான், அச்சமின்றி பெண்பிள்ளைகளை பள்ளி, கல்­லூரிகள் மற்றும் பணிகளுக்குத் தைரியமாக அனுப்பக்கூடிய சூழ்நிலை உருவாகும்" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!