கல்லூரியில் அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது

விருதுநகர்: கல்லூரி மாணவி களைத் தொலைபேசியில் பேசி தகாத பாதைக்கு இட்டுச் செல்ல பேரா சிரியை நிர்மலா தேவி முயற்சி செய்ததாகக் கூறப்படும் விவகாரத் தில் நேற்றும் அவர் பணியாற்றிய தேவாங்கர் கலைக் கல்லூரியில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவருடன் நெருக்கமாக இருந் தவர்கள் யார்? வேறு யாருக்காவது இதில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர் மலா தேவி, மாணவிகளைப் பாலி யலுக்கு அழைத்ததாகக் கூறப் பட்டதால் சில நாட்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் விசார ணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பேரா சிரியை நிர்மலா தேவி பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டது. இந்நிலையில் பேராசிரியை மீது தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்ததுபோல மேலும் சில பேராசிரியர்கள் புகார் அளித் துள்ளனர். பேராசிரியை நிர்மலா தேவியின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக் கையும் எழுந்துள்ளது. மாணவிகளிடம் பேராசிரியர் பேசிய ஒலிப்பதிவில் 'உங்கள் வங்கி கணக்கில் பணம் சேர்க் கப்பட்டு விடும்' என்று கூறுவது போல உள்ளது. இதனால் வங்கி மூலம் பணப் பரிமாற்றம் குறித்தும் அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர்.

சிறையில் வைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!