You are here

கண்ணதாசனின் பெருமையை கொண்டாடிய விழா

‘செவன் ரிதம்ஸ் புரோடக்ஷன்ஸ்’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ‘கண்ணதாசன் ஒரு சகாப்தம்’ என்னும் கலை நிகழ்ச்சி, கண்ண தாசனின் பாடல்களையும் அவற் றுள் பொதிந்திருக்கும் ஆழமான கருத்துகளையும் பறைசாற்றும் விழாவாக அமைந்திருந்தது.

இம்மாதம் 21ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் சங்க வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணதாசனின் படைப்புகளிலுள்ள பல்வேறு சிறப்பு களையும், அவரது சொல் வன்மை யையும் வாழ்க்கையின் யதார்த் தத்தை உணர்த்தும் அவரது கருத்துகளையும் இசை ஆர் வத்தையும் வெளிப்பாட்டையும் பாராட்டி அவரது பெருமையை வாழ வைத்திடும் ஒரு விழாவாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. கண்ணதாசனின் தீவிர ரசிகர் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட திரு தங்கையா குமார், “கண்ணதாசனின் பாடல்களும் அவற்றுள் பொதிந்திருக்கும் அர்த் தங் களும் காலத்தால் அழியாதவை. அவருடைய படைப்புகள் அசாதா ரண மானவை,” என்று குறிப் பிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு சிவா மோகன், கண்ண தாசனை ஒரு சகாப்தம் என்று வர்ணித்தார். கலை நிகழ்ச் சி களிலும் இசைக் குழுவிலும் பாடிய அனுபவமுள்ள இவர், “நான் பாடிய பாடல்களுள், கண்ணதாச னின் பாடல்களே என்னை மிகவும் கவர்ந்தவை,” என்று கூறினார். நிகழ்ச்சியின் இடையே காணொ ளிக் காட்சி மூலமாகத் தமிழக பிரபலமான திரு சிவகுமார், நிகழ்ச்சியைப் பற்றியும் கண்ண தாசனைப் பற்றியும் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டா ர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வர்களுக்கு கண்ணதாசனின் 55 பாடல்களை அடக்கிய ‘தம் டிரை வும்’ அன்பளிப்பாக வழங்கப் பட்ட து. இந்நிகழ்ச்சியில் கண்ணதாச னின் நீண்டகால தீவிர ரசிகர்கள் மட்டுமின்றி நிறைய இளையர் களின் பங்கேற்பையும் பங்களிப்பை யும் காணமுடிந்தது. இளையர் பாடல் அணியினர் கண்ணதாசனின் பாடல்களைப் பாடியதோடு, மாறுபட்ட மெட்டுடன் அவருடைய வரிகளைப் பாடி மகிழ்ந்தனர்.

கவியரசு கண்ணதாசனின் பாடல்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இளையர்கள் அறுவர், இசையுடன் பாடல்களைத் தொடர்ச்சியாக பாடி பார்வையாளர் களைப் பரவசப்படுத்தினர். படம்: மனோ