You are here

அறிவியலில் தமிழர்கள் புரிந்த அதிசயங்கள்

தமிழர்களின் நிலையை உயர்த்துவ திலும் தமிழ்மொழி மற்றும் அதன் மரபை வருங்கால சந்ததியினரிடம் எடுத்துச் செல்வதிலும் இளையர் களுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழ் மொழி மீதும் தமிழ் மரபின் மீதும் இளையர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் அமைந்தது ‘தமிழர் அறிவியல்’ என்ற நிகழ்ச்சி.

சங்க காலத்திலிருந்தே தமிழர் கள் அறிவியலில் சிறந்தவர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். இதனை எடுத்துரைக்கும் விதத்தில் அமை ந் தது இம்மாதம் 21ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்நிகழ்ச்சி. தமிழ்மொழி மாதத்தையொட்டி, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆண்டு தோறும் மாறுபட்ட கருப் பொருளைக் கொண்டு நிகழ்ச்சியை வடிவமைக்கிறது. இவ்வாண்டு ஐந்தாவது முறை யாகத் தமிழ்மொழி விழாவில் நடைபெற்ற ‘தமிழர் அறிவியல்’ என்ற நிகழ்ச்சியில் தமிழர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளும், அவற்றின் சிறப்பு களைப் பற்றியும் ஆராயப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னரே, 69 உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி மாணவர்கள் ‘தமிழர் அறிவியல்’ என்ற தலைப்பை ஆய்வுசெய்து தங் களின் கட்டுரைகளைப் படைத்த னர்.

உயர்நிலைப் பள்ளிகளின் பிரிவில் முதல் பரிசை வென்ற தெமாசிக் தொடக்கக்கல்லூரியில் உயர்நிலை இரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர் அப்துல் ரஹீம் சாஜித் ரஹ்மானுக்கு பரிசளிக்கிறார் சிறப்பு விருந்தினர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். (இடமிருந்து 3வது). உடன் இருப்பவர்கள் விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஜெ.கார்த்திக், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் அ.இளங்கோவன், நசீர் கனி, முனைவர் சுப.திண்ணப்பன், சங்கத்தின் செயலாளர் ரா.சங்கர். படம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்