You are here

படைப்பு சுதந்திரத்தை பறைசாற்றிய ‘பீடம்’

“படைப்புத் துறை என்பது யாரு டைய தலையீடும் இல்லாது ஒரு சுதந்திர அங்கமாகச் செயற்பட வேண்டும் என்று விழைகிறேன் நான்...” என்ற வசனத்தை ஆவே சத்துடன் பேசி நடித்தார் நாட கத்தின் சிவசங்கரி கதாபாத்திரம். இவ்வசனம் திரு இராம. கண்ண பிரான் அவர்களின் ‘பீடம்’ என்ற ரஷ்ய பாணி குறுநாவலில் எழுதப் பட்டிருக்கும் வரிகள். இக்குறுநாவலின் கதைக்கரு வும் அதுதான். படைப்புத்துறை யின் சுதந்திரம் பற்றிய திரு இராம. கண்ணபிரானின் ‘பீடம்’ என்ற குறுநாவலை, அதே தலைப்பில் குறுநாடகமாகப் படைத்தனர் அவாண்ட் நாடகக் குழுவினர்.

தமிழ்மொழி விழாவின் அங்க மாக ‘கவிச்சாரல்’ நிகழ்வில் கடந்த மாதம் 27, 28ஆம் தேதி களில் மாலை மலாய் மரபுடைமை நிலையத்தில் அரங்கேறியது இந்த குறுநாடகம். ஐந்தாண்டுகளாகத் தமிழ்மொழி விழாவில் பங்கேற்கும் அவாண்ட் நாடகக் குழு உள்ளூர் படைப்பாளி களைச் சிறப்பிக்கும் வண்ணம் அவர்களின் படைப்புகளைக் கலை வடிவில் மேடையேற்றி வருகிறது.

ச.உதுமான் கனி, க.து.மு. இக்பால், பி.கிருஷ்ணன், சே.வெ. சண்முகம் ஆகியோர் வரிசையில் இந்தாண்டு இராம.கண்ணபிரான் அவர்களின் ‘பீடம்’ படைப்பு நாடக வடிவில் மேடை கண்டது. பண்டைக் காலத்தில் ஒரு தீவில் வசிக்கும் சிற்பிகளை மைய மாகக் கொண்ட இக்கதையின் களத்தைச் சிறப்பான மேடை அமைப்புடனும் சிற்பம் செதுக்கும் ஓசையுடனும் கடலின் அலை ஓசையைப் பின்னணி இசையுடனும் கலந்து படைத்தது, அத்தீவிற்கே சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

‘பீடம்’ குறுநாடகத்தில் நடித்த நடிகர்கள்: (முன்வரிசை) ஏகநாதராக நடித்த ராமராஜ் சுந்தர், (நடுவரிசையில் இடமிருந்து) கலியவர்தனாக நடித்த யுகேஸ் குமார், கௌசல்யனாக நடித்த திரு துரைவரதராஜன் ராஜா. (பின்வரிசையில் இடமிருந்து) சிவசங்கரியாக நடித்த திருமதி ஹேமா பிரபாகரன், சுமித்திரையாக நடித்த செல்வி மாதங்கி நாராயணன். செய்தி: தாம்.சண்முகம், படம்: அவாண்ட் நாடகக் குழு