You are here

தமிழில் சிந்திக்கத் தூண்டிய பேச்சாளர் மன்றப் போட்டிகள்

வீ. காளிச்சரண்

சிங்கப்பூர் அறிவார்ந்த தேசம் என்று சொல்லிக்கொள்வதற்கு பெற்றிருக்கும் தகுதிகள், திரைப் படப் பாடல்களில் திருக்குறளின் தாக்கம், இன்றைய உலகில் திருக்குறளின் அவசியம் முதலிய பலதரப்பட்ட தலைப்புகளில் தங்க ளது பேச்சுத்திறமைகளை தமிழ்ப் பேச்சாளர் மன்றப் போட்டிகளின் போது மாணவர்கள் வெளிப் படுத்தினர். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழ்ப் பேச்சாளர் மன்றப் போட் டிகள் நடைபெற்றன. பலதரப்பட்ட வயதினரும் தங்க ளுடைய பேச்சுத்திறனை வெளிப் படுத்துவதற்கு இந்நிகழ்ச்சி வாய்ப் பளித்தது. தயாரிக்கப்பட்ட பேச்சு அங்கத் திலும் கொடுக்கப்படும் தலைப்புக ளுக்குமுன் ஏற்பாடுகள் செய்யாமல் பேசும் அங்கத்திலும் நடுத்தர வய தினரும் சில மூத்த குடிமக்களும் கலந்துகொண்டனர்.

“இதை ஒரு போட்டியாக மட்டும் கருதாமல் ஓர் அனுபவ மாகவும் கருதுகிறேன். ஆங்கிலத் தில் சிந்தித்துச் செயல்படும் வாழ்க்கைச் சூழலில் தமிழில் சிந்திக்கும் வாய்ப்பை இந்நிகழ்ச்சி வழங்கியது,” என்றார் திரு தமீம் அன்சாரி. மற்றொரு போட்டியாளரான குமாரி திலகராணி, “சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதில் என் பங்கும் இருக்கவேண்டும் என்பதற் காக நான் இப்போட்டியில் கலந்து கொண்டேன்,” என்றார்.

தயாரிக்கப்பட்ட பேச்சில் முதல் பரிசை வென்ற திருமதி ஹேமலதா மித்ரா (வலது), அரங்கப் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற திரு நா.சுகுமாரன். படம்: வீ.காளிச்சரண்