You are here

‘வியாபாரத்தில் புத்தாக்கத்துடன் மாற்றத்தை உருவாக்க வேண்டும்’

வி. அருள் ஓஸ்வின்

தொழில் தொடங்குவது எப்படி என்ற கேள்விக்கு விடைகாண உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்தில் கூடியிருந்த சுமார் நூறு பார்வையாளர்களின் முன்னிலையில் மோகன் நிறுவனங்களின் குழுமத்தின் தலைவர் திரு நாராயணமோகன் நிகழ்ச்சி ஒன்றை சென்ற கடந்த சனிக்கிழமை படைத் தார். சங்ககால தமிழ் சமூகத்திற்கும் வணிகத்திற்கு முள்ள நெருங்கிய உறவைச் சுட்டிக்காட்டி, மீண்டும் வியாபார முனைப்புடன் தமிழ் சமூகம் செயல் பட வேண்டும் என்று தொழிலதிபர் ஜோதி மாணிக்கவாசகம் தொடக்க உரையில் வழியுறுத் தினார்.

குட்டிக் கதைகள் மற்றும் நகைச்சுவை துணுக்குகளை நடு வில் புகுத்தி நிகழ்ச்சியை சுவையாகப் படைத்த திரு மோகன், பழைய தொழில் வியாபார முறை களுடன் தொழில் நுட்பத்தை இணைத்து வெற்றிபெறுவதற்கான பல உத்திகளை முன்வைத்தார். ஆளில்லா வானூர்திகள், காசாளர் இல்லாக் கடைகள், கையடக்கச் செயலிகள் ஆகியவை மூலம் வியாபாரம் புரிதல் போன்ற பல உதாரணங்களைப் பார்வையா ளர் களிடம் முன்வைத்து, எதிர்கா லத் தில் தொழில்தொடங்க தொழில்நுட்பம் இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தினார்.

திரு நாராயணமோகன். படம்: மோகன் நிறுவனங்கள் குழுமம்