அகமதாபாத்: கார்கள் கொள்ளை அடிக்கும் கும்பலின் தலைவனாக செயல்பட்ட குஜராத் மருத்துவரைப் போலிசார் வலைவீசித் தேடி வரு கின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள பால்வா பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஸ் மனியா. பகலில் மருத்துவராக சேவை செய்து வந்த இவர், இரவில் தனது சகோ தரர் அரவிந்த் உட்பட ஏனைய இருவருடன் இணைந்து காரை கொள்ளையடித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் திரு டிய கார் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த அரவிந்தை ஜூலை 30ஆம் தேதி காவல்துறை யினர் கையும் களவுமாகப் பிடித்த னர்.
அகமதாபாத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப் பட்டு இருக்கும் வாகனங்களை மருத்துவரான ஹரீஸ் மனியா திருடிக்கொண்டு பால்வா பகு திக்குக் கொண்டுசென்று விடு வாராம். அங்கிருந்து இரண்டு நாட் களில் காரின் பதிவு எண்ணை மாற்றிவிட்டு, ராஜ்கோட்டிற்கு அதே காரை அரவிந்த் எடுத்துச் சென்றுவிடுவார்.
திருடிய கார்களுடன் பிடிபட்ட கொள்ளையர்கள். படம்: ஊடகம்