You are here

‘மலேசியாவின் கடன் பிரச்சினை பற்றி சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் தெரியும்’

மலேசியாவின் கடன் பிரச்சினை பற்றி சிங்கப்பூரும் சீனாவும் புரிந்துகொண்டுள்ளன என்று மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் இங் தெரிவித்துள்ளார். முன்னைய மலேசிய அரசாங்கத்தின் ஒரு டிரில்லியன் (S$337 பில்லியன்) கடனை அடைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ள தற்போதைய அரசாங்கம் நடப்பில் உள்ள சிங்கப்பூர் மற்றும் சீனா சம்பந்தப்பட்ட மாபெரும் ரயில் திட்டங்களை மறுஆய்வு செய்யும் என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மது முன்னதாகத் தெரிவித்திருந்தார். நேற்று முன்தினம் சேனல் நியூஸ்ஏ‌ஷியா ஒளிவழிக்குப் பேட்டியளித்த திரு லிம், சிங்கப்பூரும் சீனாவும் மலேசியா வுக்கு உதவ முன்வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். புதிய மலேசிய அரசாங்கம் 110 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம் கைவிடப்படும் என்று கடந்த மாதம் அறிவித்தது. இத்திட் டம் வரும் 2026ஆம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டியிருந் தது.

மேலும் செய்திகளுக்கு