You are here

தீவு முழுவதும் 500 மின்னூட்டு நிலையங்கள்

சிங்கப்பூர் முழுவதும் சுமார் 500 மின்னூட்டு நிலையங்களை நிறுவப்போவதாக சிங்கப்பூரின் மின் விநியோகிப்பு நிறுவனமான எஸ்பி குழுமம் அறிவித்துள்ளது. 2020ல் இந்தத் திட்டம் நிறை வடையும்போது ஆகப்பெரிய மின் னூட்டு கட்டமைப்பாக அது விளங் கும் என்றும் அது குறிப்பிட்டது. குடியிருப்புப் பேட்டைகள், கடைத் தொகுதிகள், தொழிற் பேட்டைகள், வர்த்தக பூங்காக்கள் உள்ளிட்ட பல இடங்களில் மின் னூட்டு நிலையங்கள் அமைக்கப் படும் என்று எஸ்பி குழுமம் தெரி வித்தது. ஏற்கெனவே இதேபோன்று மின்னூட்டு வசதிகளை கிரீன் லாட்ஸ், ரெட் டாட் பவர், புளுஎஸ்ஜி போன்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன.

ஆனால் அவற்றுள் தங்களு டையதுதான் ஆகப்பெரிய கட்ட மைப்பாக இருக்கும் என்று எஸ்பி குழுமம் கூறியது. ஐந்தில் ஒரு பங்கு மின்னூட்டு நிலையங்களில் அதிவேகத்தில் மின்னேற்ற முடியும். நூற்றுக்கும் மேற்பட்ட நிலையங் களில் நேர் திசை (டிசி) மின்னோட் டத்துடன் ஐம்பது கிலோவாட் மின் னூட்ட வசதி இருக்கும் என்பதால் முப்பது நிமிங்களுக்கும் குறை வான நேரத்தில் வாகனங்களுக்கு முழுமையாக மின்னேற்றிவிட முடியும் என்று எஸ்பி குழுமம் கூறியது. சிங்கப்பூரில் தற்போது ஐந்துக் கும் குறைவான நேரடி திசை மின்னூட்டு நிலையங்கள் உள்ளன. இதனால் மின்சக்தி வாகன உரிமையாளர்களில் பலர் மாற்று வழி மூலம் வாகனங்களுக்கு மின் னேற்றி வருகின்றனர். ஆனால் இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.

எஸ்பி குழுமத்தின் தொழில்நுட்ப அதிகாரியான முஹமட் இஸ்மாடி கம்சானி, மின்னூட்டு நிலையத்தில் மின்சக்தி காருக்கு மின்னேற்றுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும் செய்திகள்