எந்த ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன் தனக்கான கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை நன்கு ஆராய்வதே தனது முதல் வேலையாக இருக்கும் என்கிறார் காஜல் அகர்வால். தவிர, கதையை முழுமையாகக் கேட்ட பிறகே முடிவெடுப்பாராம். "கனவு கதாபாத்திரம் என எனக்கு எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை காஜலிடம் எந்தக் கதாபாத்திரத்தை ஒப்படைத்தாலும் நன்றாக நடிப்பார் என்று பெயரெடுக்க வேண்டும். அதுமட்டுமே என் மனதில் உள்ளது.
"திரை உலகைப் பொறுத்தவரை எல்லோரிடமும் நன்றாகப் பேசிப் பழகுகிறேன். அதேசமயம் நெருக்கமான கூட்டாளி என்று யாரும் இல்லை. எனக்குப் பிடித்த நாயகன் ரஜினிகாந்த். பிடித்த நடிகை ஸ்ரீதேவி," என்கிறார் காஜல். சக நடிகைகளில் நித்யாமேனனை ரொம்பப் பிடிக்குமாம். தற்போது 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து வரும் காஜலுக்கு 33 வயதாகிறதாம்.