மதுரை: ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் புனரமைப்புப் பணி களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனும் கோரிக்கையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த விஜய்நிவாஸ் என்ற வழக்கறிஞர் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், புனரமைப்புப் பணிக ளுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.620 கோடி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். ஸ்டெர்லைட் ஆலையால் 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் காற்று, நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக் கும் ஏராளமான கிராம மக்க ளுக்குப் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட் டுள்ளது என்றும் விஜய்நிவாஸ் தம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
"ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி கலவரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தாருக்குத் தலா ரூ.10 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும். "மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புனரமைக்கும் பணிகளுக்கு அந்நிறுவனம் சார்பில் ரூ.620 கோடி தலைமை நீதிபதியின் நிவா ரண நிதிக்குச் செலுத்தப்பட வேண்டும்," என விஜய்நிவாஸ் வலியுறுத்தி உள்ளார். இந்த நிதியின் மூலம் ஆலை யால் பாதிக்கப்பட்டுள்ள மீளவிட் டான், குமரரெட்டியார்புரம், மடத் தூர், கோரம்பள்ளம் மற்றும் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற் கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் அவரது மனுவில் கோரப் பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வர உள்ளது.